நீ by முகிலன்
”அதுக்குனு… ஒரு லிமிட் வேண்டாம்…?”
”நோ… டென்ஷன் பேபி..! கம்..கம்..!!” என்று பக்கத்தில் உட்கார்ந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

இப்போது  அவள்  வேறு ஒரு நீலநிற புடவையில் இருந்தாள். தலை நிறைய பூ.. கை நிறைய வளையல் என இன்றைய தினத்தின் மேக்கப் இன்னும்  அவளை அழகாக்கி.. ஒரு பேரழகியாகக் காட்டியது..!
”ரெஸ்ட் எடுக்கவே விடறதில்ல..” என்று முனகினாள்.
”புதுப் பொண்ணு இல்ல.. நீ..?" அவளை என்னுடன் சேர்த்து  அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். என் கை அவள்  இடையை தடவியது.

"நிலா"
"ம்ம்? "
"நேத்திக்குவிட இன்னிக்கு  நீ இன்னும் ரொம்ப  அழகாருக்கேடி செல்லம்"
"ம்ம் " அவள் முகத்தை  என் மார்பில் தேய்த்தாள்.

அவளை வாசம் பிடித்து கிறங்கினேன். 
" ஆமா என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னியாமே..?” 
”யாரு சொன்னாங்க…?” மெல்ல கேட்டாள். 
”குணா…” 
”ஆ… சொன்னான்…”
”சொன்னானா…?” 
”ம்.. உங்ககிட்ட சொன்னத வந்து.. என்கிட்டயும் சொன்னான்..”என்றாள்.

அப்பறம் சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாள். 
”அப்றம்… நான் எப்படி இருக்கனும்..?”
”நீ… நீயாவே இரு…” என்றேன்.
”நானாவேன்னா..?” 
”உன் விருப்பம்..! உன் ரசனை. ! இப்படி எதுவும் எனக்காக மாற வேண்டியதில்ல…!!” 
”அதில்ல…” என்றாள்.
மெல்ல”உங்க பொண்டாட்டியா வரப்போறவ எப்படி இருக்கனும்னு உங்களுக்கும் ஒரு கனவு… இருந்திருக்குமில்ல..?” என்றாள்.
” ஓ..! ஆனா.. நிலா.. எனக்கு அப்படி ஒன்னும் பெரிய… கனவுகள் இல்ல..”
”இருந்தா சொல்லுங்க… என்னை நான் மாத்திக்கறேன்..” 
”ம்.ம்..! சொல்லிக்கற மாதிரி இல்லம்மா..! தோணினா சொல்றேன்.. ஓகே. ..?”
”ம்..ம்..! அப்பறம்.. நீங்க…?” 
” நானா..?” 
”ம்..ம்..! உங்க பழக்கங்கள்…? இந்த பீடி…சிகரெட்…?” 
”தண்ணி… குட்டி…?” நான் எடுத்துக் கொடுக்க..
”ம்ம்..” என்று சிரித்தாள்.

”ட்ரிங்க்ஸ் பண்ணுவேன்..! பட் நோ… ஸ்மோக்கிங்…!!”
”ம்ம்..! குட்டி…?”
”ரொம்ப புடிக்கும்..” 
” அந்த மாதிரியா…?” ஒரு மாதிரி குரலில் கேட்டாள். 
சட்டென ”சே.. சே… ரசிப்பேன்னு சொன்னேன்..”என்றேன். 
”அ..அது..! எல்லா.. ஆண்களும் பண்றதுதான..?”

நான் சிரித்தேன். மேலே சொல்ல யோசிக்க வேண்டியிருந்தது.
அவளே.. ” கேர்ள் பிரெண்ட்ஸ் ..உண்டா..? ” என்று கேட்டாள். 
”ம்..! ஆனா அதிகமா.. இல்ல..”
”நெருக்கமானவங்க… யார்..யாரு..?”
”ரொம்ப நெருக்கம் இல்ல..! ஒரு சுமாரா பேசிப்பேன்..! அவ்வளவுதான்…!!”
”க்ளோஸ் பிரெண்டு… இல்ல..?”
”ம்கூம்…!! பெண்கள்ள.. இல்ல…!!”
”அப்ப.. அந்த… தாமரை..?” என்று கொக்கியை வீசினாள்.

நான் திகைத்து..  லேசான திகைப்புடன் அவளைப் பார்த்தேன்.
”தாமரையா…?” 
”ம்ம்.. கோயில்ல மீட் பண்ணமே…?”
”ம்..! பேரெல்லாம் கூட.. நாபகமிருககா…?”
”நேத்துகூட… வந்துருந்தா.. இல்ல…”
”ம்..ம்..”
”கூட அவ பிரெண்டு..?” 
”தீபமலர்…” 
” கரெக்ட.. தீபமலர்…” 
”நல்ல… நாபகம் உனக்கு..?” 
”கிராமத்து எளிமை..! மனசுல நல்லா பதிஞ்சிருச்சு…!!” 
”ஓ…” 
”சரி… உங்க தாமரை எப்படி..?” என்று இயல்பாகக் கேட்டாள்.

உண்மையாகவே  திடுக்கிட்டேன்.
”என்ன.. என் தாமரையா..?” 
”ம்..ம்..! உங்க பிரெண்டு… தாமரை..? ”

அதைக் கிளற நான் விரும்பவில்லை.
”ம்..ம்..! அவ எதார்த்தமான போண்ணு..! நல்ல குணம்..!!” 
”ம்ம். ..” என் நெஞ்சில் கோலம் போட்டவாறு மெல்லிய குரலில் கேட்டாள். ”கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா..?”

நான் திடுக்கிட்டேன்.அவள்  அழகு முகத்தை  உற்றுப் பார்த்தேன்.  அவள் முகத்தில் புன்னகை தவிற.. வேறொன்றும் தென்படவில்லை. ஆனால் என் முகத்தில் புன்னகை இல்லை.
”என்ன சொல்ற.. நிலா..?”
”மனசு விட்டு பேசலாமே..?” என்றாள்.
”மனசு விட்டுன்னா…?” 
”ஓ..! அதுகூட.. தெரியாதா..?” 
” அ..அப்டி.. இல்ல..! வந்து… என்ன பேசறதுனு..?”
”நிறைய பேசலாம்..!!” என்றாள். ”உதாரணத்துக்கு.. சொல்லனும்னா.. உங்க… தாமரை பத்திகூட பேசலாம்..”

நான்  மறுபடி திடுக்கிட்டேன்.
”ஏய்…” 
சிரித்தாள்.. ”உங்க பிரெண்டு தாமரைனு சொல்ல வந்தேன்..” என்று சிரித்தாள்.

தாமரை.. உன் விவகாரம் இவளுக்கு தெரிந்து விட்டதோ..? நான் அவளையே பார்க்க.. அவள் என்னைப் புன்னகையுடன் பார்த்தாள்.
”சரி.. இப்ப வேண்டாம்.. இன்னோரு நாள் பேசிக்கலாம்..” என்றாள்.
நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க… ”இப்ப பேசினா… நம்ம ஜாலி முடு கெட்றும்..” எனச் சிரித்தாள்.

‘நிச்சயமாக தெரிந்துதான் போனது.’
அதேநேரம்… கதவு சன்னமாக  தட்டப் பட்டு  ”மே..ஐ..கம் இன்..?” என்றது பெண் குரல்..!
நிலாவினி என்னைவிட்டு.. விலகி உட்கார்ந்தாள்.
”வா… நித்தி..”

உள்ளே வந்த நித்யா.
”ஸாரி..ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..” என்று சிரித்தாள். 
நானும் சிரித்தேன்.
”ஹேய்.. வா..” 
”உக்காரு..” என்றாள் நிலாவினி.

”நா… உக்கார வல்லப்பா..” என்று சிரித்தாள். என்னைப் பார்த்து..
”கீழ வாங்க ரெண்டு பேரும்..! உங்கள பாக்க கெஸ்ட் வந்துருக்காங்க..!!” என்றாள்.
”யார்ரீ…?” என்று கேட்டாள் நிலாவினி.
”வாங்களேன்..!!” என்று சிரித்தாள்.
”ம்..ம்..ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க…!! கீழ போலாம்..” என்றாள் நிலாவினி…!!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-08-2019, 11:01 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 5 Guest(s)