Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக் கான்..! – திகைத்து போன மக்கள் செல்வன்..!


விஜய் சேதுபதி என் வாழ்க்கையில் நான் பார்த்த நபர்களிலேயே மிக அற்புதமான மனிதர், அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெருமையாக கூறியுள்ளார். விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாலிவுட் பாட்சா ஷாருக்கான்.
[Image: vijay-sethupathi-sharuk.jpg]
இந்திய மொழித் திரைப்படங்கள் பங்குபெறும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆகஸ்டு 8ஆம் தேதி தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் 22 மொழிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கு பெற்றன.
இதில் சிறந்த படமாக விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படமும், சிறந்த நடிகருக்கான விருது, இந்தப் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது, இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் கிடைத்துள்ளது.
இதையடுத்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியை பாராட்டிப் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான, விஜய் சேதுபதியை ஒரேயடியாக புகழ்ந்து தள்ளிவிட்டார். அதோடு விஜய் சேதுபதியிடம் பல கேள்விகள் கேட்டு சந்தோஷப்பட்டார்.
அதோடு, விஜய் சேதுபதி என் வழ்க்கையில் நான் பார்த்த மிக அற்புதமான மனிதர் (the wonderful actor ever seen in my life) என்று ஷாருக் கான் புகழாரம் சூட்டியது தமிழ் சினிமாவுக்கும், விஜய் சேதுபதியின் நல்ல நடிப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஷாருக்கான் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த 10 ஆண்டுகளில் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருவார் என்றே தமிழ் சினிமா பிரபலங்கள் கருதுகின்றனர்.
ஷாருக் கான், அர்ஜுன் கபூர், தபு, விஜய் சேதுபதி, காயத்ரி ஷங்கர் இவர்கள் எல்லோரும் ஒன்றாக நின்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். விஜய் சேதுபதியின் நடிப்பையும், அவரது எளிமையும் என்னை மிகவும் கவர்ந்தது என்று ஷாருக் கான் சொன்னதாகவும், இப்படி பட்ட ஒரு கலைஞனிடம் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் மேடையில் பேசும் போது, இந்திய திரைப்படமான சூப்பர் டீலக்ஸ், அந்தாதுன் மற்றும் கல்லி பாய், என இந்த மூன்று திரைப்படங்களின் கதைக் கருவை கூறுவதற்கு ஒரு தைரியத்தையும் மாற்று முகத்தையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
இந்திய சினிமாவைப் பார்க்கும் முறையையும், உலகம் முழுவதும் எவ்வாறு பயணித்தன என்பதையும் கூறுகிறது. இவை அனைத்தும் புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள சர்வதேச பார்வையாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன, இது இந்திய சினிமாவை மிகவும் பெருமைப்படுத்துகிறது, என்று கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-08-2019, 09:51 AM



Users browsing this thread: 4 Guest(s)