Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஒரு கிராமத்தின் வரைபடம் அழிந்துள்ளது.
கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் மழை போக போக அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. 4 நாட்களில் கேரளாவில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது.
அதிகம் என்ன
இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றால் அது வயநாட்டில் மேப்படி என்ற பகுதியில் உள்ள புதுமலை என்ற கிராமம்தான். கேரளாவில் மழை காரணமாக அதிகமாக நிலச்சரிவு ஏற்பட்டது புதுமலை பகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கடந்த நாட்களில் மட்டும் 15க்கும் அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


[Image: kerala-flood322323-1565491187.jpg]
 
[color][size][font]
புதுமலை எப்படி
அது மட்டுமில்லாமல் மழை காரணமாக, புதுமலை பகுதியில் 1000க்கும் அதிகமான வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போய் இருக்கிறது. மொத்தமாக ஒரு குட்டி மழை நிலச்சரிவில் காணாமல் போய் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதுமலை நிறைய டீ எஸ்டேட் கொண்டது. எல்லா டீ எஸ்டேட்டும் மொத்தமாக மழையால் சரிந்துள்ளது.
[/font][/size][/color]

[Image: kerala-flood232323-1565491180.jpg]
 
[color][size][font]
ஏழைகளின் ஊட்டி
பொதுவாக புதுமலையை ஏழைகளின் ஊட்டி என்று அழைப்பது வழக்கம். அந்த அளவிற்கு அழகு கொஞ்சும் இந்த பகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் கடந்த சில நாட்களில் மட்டும் விழுந்து இருக்கிறது. சில இடங்களில் இயல்பு நிலை திரும்ப பல வருடங்கள் கூட ஆகும் என்கிறார்கள்.[/font][/size][/color]

[Image: kerala-flood23232333-1565491172.jpg]
 
[color][size][font]

வரைபடம் என்ன
பல வீடுகள் இடிந்தது, எஸ்டேட்கள் சரிந்து மறைந்தது, ஒரு மலையே காணாமல் போனது என்று வரிசையாக நடந்த நிகழ்வுகளால், புதுமலையின் வரைபடம் மொத்தமாக மாறி இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக புதுமலை நிறைய மாற்றங்களை சந்தித்து உள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன[/font][/size][/color]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by peter 197 - 11-08-2019, 09:41 AM



Users browsing this thread: 99 Guest(s)