10-08-2019, 04:58 PM
"இதுக்காகவா நான் பிக்பாஸிற்கு போனேன்?" சரவணன் அளித்த முதல் பேட்டி!
பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு பணம் பங்குபெற்று வரலாம் அதன் மூலம் புது வாழ்க்கையை துவங்கலாம் என எண்ணியிருந்தேன் . ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
நான் கல்லூரி படித்த காலத்தில் பேருந்தில் பெண்ககளிடம் விளையாட்டாக தவறாக நடந்து கொண்டது உண்மை தான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு அதற்காக செல்லவில்லை. அங்கிருக்கும் பெண்களிடம் கண்ணியமாக தான் நடந்துகொண்டேன். அப்படியிருந்தும் என்னை இப்படி அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்.
இது முன்னரே தெரிந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம் தான், நான் நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது என்னக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் தான் வீட்டிலிருந்த மற்ற போட்டியாளர்களிடம் கூட சொல்லாமல் வெளியேறி விட்டேன். என மிகுந்த வேதனையோடு கூறியுள்ளார்
first 5 lakhs viewed thread tamil