Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கபினியிலிருந்து வெளியேறும் தண்ணீர் பல மடங்கு அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கேரளாவிலும் கடும் பருவ மழை கொட்டி வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட காவிரி நதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

[Image: kabani-zq1eitb-1565370613.jpg]


எனவே அனைத்து வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடுகிறது கர்நாடகா. இப்படி வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு, தினமும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கட்டில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாளை தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 40 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்று இரவு அல்லது நாளை காலையில் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி அளவாக அதிகரிக்கக் கூடும்.

எனவே தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 10-08-2019, 09:22 AM



Users browsing this thread: 87 Guest(s)