Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#16
இரவு எட்டு மணி !!! ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து.. இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான் நவநீதன்.!!! வெளியில் இருந்து வந்த கிருத்திகா அவன் பக்கத்தில் வந்து நின்று.. மெதுவாக அவன் தோளில் கை வைத்தாள். சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான் !!! 

'' பெரியம்மா வந்துருக்கு '' என அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.

அவன் மேல் பதிந்த அவளின் பார்வைக்கு என்ன பொருள் என அவனுக்கு விளங்கவில்லை. பரிதாபமாகவும் தோன்றியது.. கருணையாகவும் தோன்றியது. 

அவன் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மெதுவாக எட்டிப் பார்த்தான். அவனுடைய பெரிய அத்தை. அவளும் இதே ஊரில்தான் இருக்கிறாள். ஆனால் வேறு இடம்.

'' வாங்கத்தே '' மெதுவாக எழுந்தான்.

அத்தை உள்ளே வந்தாள். 
''என்னடா.. ஊருக்கு போறியா ?'' 

'' ஆமாத்தே '' தர்மசங்கடத்துடன் பதில் சொன்னான்.

''ம்ம். . ஏன்டா.. அந்த கம்பெனில வேலை இல்லேன்னா என்ன..? வேற கம்பெனியா இல்ல.. அங்க வா.. நிறைய கம்பெனி இருக்கு.. நான் சேத்து விடறேன். பெரிய பாப்பாவோட வீட்டுக்காரர் மூணு கம்பெனில காண்ட்ராக்ட் போட்றுக்காரு.. உனக்கு வேலை இல்லேங்காம இருந்திட்டிருக்கும்.''

'' இருக்கட்டும்த்தே.. நான் ஊருக்கு போய்ட்டு வந்து.. அப்பறம் வரேன்..'' 

'' ஏன்டா ஒரு மாதிரி பேசற.. ஏதாவது சங்கட்டமா ?''

''ச்ச.. அதெல்லாம் இல்லத்தே..'' 

'' இவ ஏதாவது சொன்னாளா.. ஏன்டி எங்கண்ணம்பையன எவன்டி பேசினது.. ? சொல்லுடா ராஜா.. ஆத்தாளையும் மகளையும் இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிர்றேன்.. ஏய் கிருக்கி.. நீ ஏதாவது சொன்னியாடி ?'' என்று  அத்தை கிருத்திகாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டாள். 

'' க்கும்.. ஆமா.. உன் மருமகன வேற.. அப்படியே நாங்க சொல்லிர்றோம். ஆளப்பாரு... '' என்றாள் கிருத்திகா. அவள் குரலில்  ஒருவித  ஆற்றாமை இருந்தது.

சீரியல் பார்த்துக் கொண்டிருந்த சின்ன அத்தை சிரித்தபடி சொன்னாள். 
'' நானும் எப்படி எல்லாமோ கேட்டுப் பாத்துட்டேன். பையன் மனசுக்குள்ள என்ன வெச்சிருக்கான்னே தெரியல.. இப்ப ஒரு நாலு நாளா பேயறைஞ்ச மாதிரியே இருக்கான். சரியா சாப்பிட மாட்டேங்கறான்.. தூங்க மாட்டேங்கறான்.. எடைல ரெண்டு தடவ தண்ணி போட்டுட்டு வந்துருக்கான். என்னமோ இருக்கு புள்ள அவன் மனசுல.. என்ன கேட்டாலும் என்கிட்ட  சொல்ல மாட்டேங்கறான்.!!!'' 

அவனுக்கு மேலும் சங்கடமாக இருந்தது. 
'' ச்ச.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. நீங்க ஏன் கண்டதையும் நினைச்சிட்டு...'' என்று  அத்தைகளை மாறி மாறிப் பார்த்தபடி மறுத்தான்.

பெரிய அத்தை அவன் பக்கத்தில் வந்து.. அவன் தலையைத் தடவினாள்.
''எங்கண்ணன உருச்சு வெச்ச மாதிரி வந்து பொறந்துருக்கடா.. உன்ன பாக்கறப்ப எனக்கு சின்ன வயசாருந்தப்ப  எங்கண்ணன பாக்கற மாதிரியே இருக்கு. உனக்கு என்னடா கவலை.. அத்தைகிட்ட சொல்லு.. '' 

'' அச்சோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல அத்தை. நான் போய் அங்கயே இருந்துற மாட்டேன். கொஞ்ச நாள் இருந்துட்டு வந்துருவேன். !! அம்மா பாவம்.. ஒண்டியா இருக்கில்ல..த்தே..'' 

'' இவ ஏதாவது சொன்னாளாடா.. என் தங்கத்தை.?'' என்று மீண்டும் கிருத்திகாவை சீண்டினாள் பெரிய அத்தை. 

'' இத பார் பெரிய கிழவி.. என்னை வம்புக்கு இழுத்த.. அப்பறம் நான் மசக்கடுப்பாகிருவேன் சொல்லிட்டேன். இவன் போறதுல எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா..? அவனையே கேளு...'' என்று முதலில் சீறி பின்னர்  ஒரு மாதிரி வருத்தமாகச் சொன்னாள் கிருத்திகா. 

'' அத்தை ப்ளீஸ்.. யாரும் எதுவும் நெனச்சிக்காதிங்க. இங்க வேற..  வேலை ரொம்ப டல்லா இருக்கு.. அம்மாளுக்கும் சரியா பணம் அனுப்ப முடியறதில்ல.. அதான் கொஞ்ச நாளைக்கு....'' 

'' ம்ம்.. சரிதான் போ.. அம்மாள பிரிஞ்சு இருக்க முடியலியோ என்னமோ.. புருஷன் போனப்பறம் அவ உன்மேலதான் உசுரையே வெச்சிருந்தா.. அப்ப நீ ஓடி ஆடி விளையாடற வயசு.. உங்கண்ணனுக்கு விவரம் இருந்துச்சு உனக்குத்தான் ஒண்ணும் தெரியாது..'' என பழங்கதை பேசி பெரிய அத்தை தன் அண்ணனுக்காக கண்ணீர் வடித்தாள்.  

சின்ன அத்தை சொன்னாள்.
''இவன் போய்ட்டா எனக்குத்தான் ஒரு கையே ஒடஞ்ச மாதிரி இருக்கும்..'' 

'' அவன் இங்கயே இருக்கனும்னா இந்த கிருக்கிய புடிச்சு இவனுக்கே கட்டி வெச்சிரு..'' என கிருத்திகாவைப் பார்த்தபடி சொன்னாள் பெரிய அத்தை..!

தன் பெரியம்மாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. அவள் மனம் ஒரு வகை எரிச்சலை அடைந்து அவள் கோபத்தை தூண்டி விட்டிருக்க.. தன் மார்புகள் ஏறி இறங்க.. மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்..!! 

'' என்னடி இப்படி மொறைக்கற.? என் அண்ணன் மகனுக்கு என்னடி கொறை.. ஆளு பாரு.. தேசிங்கு ராஜா மாதிரி எத்தனை கம்பீரமா இருக்கானு.. அவன கட்டிக்க உனக்கெல்லாம் கசக்குதா என்ன.??'' கிருத்திகாவின் பெரியம்மா.. நவநீதனை லேசாக அணைத்தபடி சொல்ல... கிருத்திகா கடுப்பாகிக் கேட்டாள். 

'' ஏன்.. இவ்வளவு பாசம் வெச்சிருக்கற உன் அண்ணன் மகனுக்கு.. நீ உன் மகளுகள கட்டி வெச்சிருக்கிறது ?''

'' நானல்லாம் ரொம்ப ஆசையாதான்டி இருந்தேன். பெரியவ இவனுக்கே பெருசுன்னாலும் சின்னவள கட்டி குடுத்துருலாம்னு.. அந்த சிறுக்கி முண்ட என் பேச்செல்லாம் எங்க கேட்டா.. லவ் பண்றேனு ஒருத்தன இழுத்துட்டு வந்து நிக்கறா.. !! இல்லேன்னா எங்கண்ணன் பையனுக்கு குடுக்கறதுக்கு எனக்கு என்ன கசக்குதா.. ? இப்ப நீதான் ஒருத்தி முறையோட இருக்க.. கட்டிக்கவே.. ?''

'' போ.. உனக்கு வேற வேலை இல்ல.. ''

''ஏன்டி.. நீயும் எவனையாச்சும் லவ் பண்ணி இழுத்துட்டு  வரப் போறியா என்ன.. ??'' 

'' இத பார் மூத்த கெழவி.. இப்படியே பேசி பேசி என்னை கடுப்பேத்திட்டிருந்த.. அப்பறம் இங்கருந்து போறப்ப நீ என்கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டுதான் போவே.. தெரிஞ்சிக்கோ.. '' எரிச்சலை அடக்கிக் கொண்டு தன் பெரியம்மாவை எச்சரிக்கை செய்தாள் கிருத்திகா .

''ஹ்ம் பார்ரா மருமகனே.. இவளுகள பெத்து வளத்துனதும் இல்லாம.. இவளுககிட்ட அடி எல்லாம் வாங்கனுமாமா..?'' அத்தை சிரித்தபடி சொன்னாள்.

'' சரி.. சரி.. விடுங்கத்தை.. !!'' தன் சோகத்தை உள்ளேயே மறைத்துக் கொண்டு சிரித்தான் நவநீதன் .!!!

  அப்பறமும் கொஞ்ச நேரம்... ஊர்க்கதை உறவுக்கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்த பின் விடை பெற்றாள் பெரிய அத்தை..!

'' சரி ராஜா நான் போறேன்டா.. காலைல போறப்ப முடிஞ்சா ஒரு எட்டு வந்துட்டு போ. எட்டு மணிக்கு முன்னால வா.. உன் மாமனும் இருக்கும்.. அதுக்கு மேல நானும் கம்பெனிக்கு போயிருவேன்.! நானும் உங்க ஊருக்கு ஒரு நடை வரனும். ஆனா எங்க முடியுது உன் மாமன் மக.. சின்னவ வேற.. வயசுக்கு வந்துட்டானு சொல்லி ஆறு மாசத்துக்கு மேலயே ஆச்சு. இன்னும் போய் பாக்கவே இல்ல. உன் மாமன்கிட்ட சொல்லு.. ஒரு நாளைக்கு வரோம்னு. அப்பறம் உங்கண்ணனை ஒரு நடை வரச் சொல்லு.. பொண்டாட்டி புள்ளைகளை கூட்டிட்டு..'' 

'' சரித்தே.. சொல்றேன்.. !!!'' 

மூன்று பேரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெற்றுப் போனாள் பெரிய அத்தை.

நவநீதன் மீண்டும் போய்  சேரில் உட்கார.. அவன் பின்னால் வந்து நின்று.. அவனது இரண்டு தோள்களிலும் தன் இரண்டு கைகளையும் மெதுவாக பதித்தாள் கிருத்திகா..! பின்னால் கழுத்தை வளைத்து அவளைப் பார்த்தான் நவநீதன்.! 

'' உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..'' என்று  மெதுவாகச் சொன்னாள் கிருத்திகா.

'' ம் !!'' என்றான். ''என்ன? ''

'' இங்க வேண்டாம். வா.. ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாம்.. '' 

போக விருப்பம் இல்லைதான். இருப்பினும் அவனுடன் தனியாக ஏதோ பேச ஆசைப் படுகிறாள்... என்னவென்றுதான் கேப்போமே...!!!

சேரை விட்டு மெதுவாக எழுந்தான் நவநீதன்..!!! 

'' அம்மா.. நாங்க ரெண்டு பேரும் வெளிய போய்ட்டு வரோம்...!!!'' 

'ஆ'வென வாயைப் பிளந்தபடி சீரியலில் கவனம் தொலைந்து போயிருந்த தன் அம்மாவிடம் சொன்னாள் கிருத்திகா. அவள் சொன்னது அம்மாவின் செவிகளை எட்டவில்லை. எரிச்சல் வந்தது. !

''ஏய்... அம்மா.. !!'' கத்தினாள். 

சத்தம் கேட்டுத் திரும்பி இவளைப் பார்த்தாள். 
'' எதுக்குடி இப்ப.. இப்படி கத்தற..?''

'' நாங்க ரெண்டு பேரும் வெளிய போய்ட்டு வரோம்..! டிவி முன்னால உக்காந்தா அவ்வளவுதான்.. உலகமே அந்த டிவிதான் உனக்கு.. '' 

'' எங்கடி போறிங்க..?''

'' ம்ம்.. பிராண்டி கடைக்கு.. ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுட்டு வரோம்..!! நீ வா.. !!'' கிருத்திகா முன்னால் போய் கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டு அவன் செருப்பை எடுத்து தயாராக வைத்தாள். 

மீண்டும் அத்தை சீரியலில் தொலைந்து போக.. நவநீதன் வெளியே வந்து செருப்பை மாட்டினான்.! வீதிக்கு போனதும் அவன் கையைக் கோர்த்துக் கொண்டாள் கிருத்திகா. மெல்ல நடை போட்டவாறு கேட்டாள்.!
'' என்னாலதானே நீ ஊருக்கு போற..?''

'' அப்டி இல்ல.. '' மெதுவாக முனகினான் நவநீதன். 

''பொய் சொல்லாத எனக்கு தெரியும்.. நீ ஏன் போறேனு..'' 

அவன் பதில் சொல்லாமல் நடந்தான். அவன் மனம் இன்னும் கனத்துப் போயிருந்தது. இதயத்தை யாரோ கைகளால் பிடித்து பிசைவது போலிருந்தது.!!!

'' ம்ம்.. சரி நீ போறதுனு முடிவு பண்ணா... போய்க்கோ.. நான் அதைப் பத்தி பேச வரல.. '' என மெல்லிய குரலில் சொன்னாள் கிருத்திகா. 
''இந்த ஒரு வருச லவ்வுக்கே நீ இப்படி பீல் பண்றேன்னா.. அஞ்சு வருசமா என்னை லவ் பண்ற அவன் எப்படி ஃபீல் பண்ணுவான்.. ? கொஞ்சம் யோசிச்சு பாரு.? அவன நானும் டீப்பா லவ் பண்றேன். உனக்கு ஒண்ணு தெரியுமா.. அவன் இப்ப இங்க இல்ல.. வேலைக்காக கோயமுத்தூர்ல போய் ரூம் எடுத்து தங்கிருக்கான் ரெண்டு வருசமா.. ஆனா ஒரு மாசம்கூட அவன் என்னை பாக்க வரத மிஸ் பண்ணதே கிடையாது. ஒவ்வொரு மாசமும்.. ஏழாந்தேதி டான்னு வந்துருவான். அன்னிக்கு நானும் லீவு போட்றுவேன். ரெண்டு பேரும் நெறைய சுத்துவோம்.. சினிமா.. பார்க்னு திருப்பூர்.. கோயமுத்தூர் ரெண்டு ஊர்லயும் சுத்திருக்கோம். மணிக்கணக்குல உக்காந்து பேசிருக்கோம்.. அப்பறம் ரெண்டு தடவ ஊட்டி கூட போய்ட்டு வந்துருக்கோம்..! இதெல்லாம் எங்க ரெண்டு பேரை தவிற.. இப்ப மூனாவதா உனக்கு மட்டும்தான் தெரியும். வேற யருக்கும் தெரியாது. இத நான் ஏன் உன்கிட்ட சொல்றேனு யோசிக்காத.. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதோட இத நீ தெரிஞ்சிக்க வேண்டியதும் ரொம்ப அவசியம்..!!!''

''ம்ம்ம் '' 

'' ஒரு நிமிசம் நீ அவன் எடத்துல இருந்து யோசிச்சு பாரு.. இந்த அஞ்சு வருசத்துல அவன் என்மேல எத்தனை ஆசைகள வளத்து வெச்சிருப்பானு.? என்னை நினைச்சு எத்தனை கற்பனை கோட்டைகள் கட்டியிருப்பான். அஞ்சு வருசம் ஆகியும் எனக்காக.. மாசத்துல ஒரு நாள் பறந்து வரான்னா.. என்மேல எத்தனை லவ் இருக்கும் அவனுக்கு.? இப்படிப்பட்ட ஒருத்தனை விட்டுட்டு நான் உன்னை லவ் பண்ணா.. அது.. நான் அவனுக்கு பண்ற எத்தனை பெரிய துரோகம்.. ? அதை நான் செய்யலாமா.. ? நீயே சொல்லு.. ?'' 

'' வேண்டாம். !!!'' தன் ஆற்றாமையை அடக்கிக் கொண்டு.. சட்டென தோன்றிய சினிமா வசனத்தை எடுத்து விட்டான் நவநீதன். 
''அவனுக்காக நீ எதைவேணா விட்டுத் தரலாம்.. ஆனா எதுக்காகவும் அவனை மட்டும் விட்டுக் குடுத்தறாதே.. !!!''
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 09-08-2019, 10:46 PM



Users browsing this thread: 13 Guest(s)