Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்த BRTS வழித்தடங்களின்றி, பிற வழித்தடங்களில் இந்த BRTS சிறப்புப் பேருந்துகள் செல்ல நேரிடும்போது போக்குவரத்து சிக்னல்களில் அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிக்கெட்களுக்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இதைப் பேருந்தில் ஏறும்போதே கதவுகளில் ஸ்வைப் செய்துகொள்ளலாம். இதுபோக வழக்கமான டிக்கெட்களை அனைத்து BRTS பேருந்து நிறுத்தங்களில் முன்பே பெற்றுக்கொள்ளமுடியும்.
[color=var(--content-color)]இந்த BRTS வடிவமைப்பு முழுவதும் ஏற்கெனவே இருக்கும் சாலைகளை வைத்தே திட்டமிடப்பட்டுள்ளது. எனவே புதிதாக சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை சில இடங்களில் இந்த BRTS அமைப்பிற்கான விரிவான சாலை அமைப்பு இல்லையெனில் அங்கும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாது. மாறாக, அங்கு வழக்கமான மிக்ஸ்டு டிராஃபிக் முறையே பின்பற்றப்படும்.[/color]

[color=var(--content-color)]மொத்தம் 120 கி.மீ தொலைவிற்கு இந்த BRTS வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவான பலவழிச் சாலைகளில் ஒரு பாதையின் அகலம் 3.5 மீட்டர் இருக்கவேண்டும். இந்த விதியைப் பின்பற்றி BRTS-ல் பேருந்து செல்லும் பாதை 3.5 அகலமும், பேருந்து நிறுத்தம் அமையும் இடங்களில் பாதை 7 மீட்டர் அகலமும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தங்களோடு ஆங்காங்கே பிற போக்குவரத்து நிலையங்களும் இணையும்படி வழிசெய்யப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fa51cd620-a11a-4ef4-a...2Ccompress]
BRTS வழித்தட பேருந்துகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர்
[/color]
[color=var(--content-color)]முதல்கட்டமாக மட்டுமே இந்த 7 வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அரசு முழுமையாகச் செயல்படுத்திய பின்பு, இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டாவது கட்டமும் உருவாக்கப்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
தற்போது இருக்கும் பேருந்து வழித்தடங்களிலேயே மாற்றங்கள் செய்து இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிக அதிக செலவு இருக்காது. மேலும், மெட்ரோ ரயில்களைவிட டிக்கெட் விலை குறைவு, வேகமான பயணம் போன்ற காரணங்களுக்காக மக்கள் இதை நாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதுபோக சொந்த வானங்களில் செல்வோரும் பயண நேரம் கருதி இதில் பயணித்தால், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னுமே குறையும். இது அவர்களுக்கு எரிபொருள் சிக்கனத்திற்கு மட்டும் வழிவகுக்காமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். இந்தக் காரணங்களால் BRTS-க்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்களும் அவற்றின் தொலைவு விவரங்களும் பின்வருமாறு.
1. கோயம்பேடு - பூவிருந்தவல்லி - 14 கி.மீ
2. கோயம்பேடு - அம்பத்தூர் - 7.70 கி.மீ
3. கோயம்பேடு - மாதவரம் - 12.40 கி.மீ
4. சைதாப்பேட்டை - சிறுசேரி - 24.25 கி.மீ
5. சைதாப்பேட்டை - மஹிந்திரா சிட்டி - 42.00 கி.மீ
6. துரைப்பாக்கம் - குரோம்பேட்டை - 10.60 கி.மீ
7. கோயம்பேடு - சைதாப்பேட்டை - 9.00 கி.மீ
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F36ecdee8-3ddb-4bef-b...2Ccompress]
பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்
[/color]
[color=var(--content-color)]இப்படி நிறைய நன்மைகள் இருந்தாலும் சரியான திட்டமிடல்கள் இல்லையெனில் தோல்வியடையவும் வாய்ப்புண்டு. உதாரணமாக, டெல்லியில் 2008-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு பேருந்து வழிகளில் ஏற்பட்ட அதிகமான நெரிசலின் காரணமாக 2016-ம் ஆண்டு கைவிடப்பட்டது. இங்கு அத்தகைய சிக்கல்கள் எழாமல், போக்குவரத்து நெரிசலை BRTS கட்டுப்படுத்தும் என நம்புவோ[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 09-08-2019, 09:47 AM



Users browsing this thread: 74 Guest(s)