Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]பேருந்துகளுக்குத் தனிப்பாதை, ஹைடெக் அம்சங்கள்... சென்னையின் நெரிசலைக் குறைக்குமா BRTS?
[color=var(--content-color)]பூஜா[/color]
[color=var(--title-color)]சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகளுக்குத் தனிப்பாதை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இது சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமா?[/color]
[/color]
[Image: vikatan%2F2019-08%2F3bbe6b1f-b63c-4a78-8...2Ccompress][color=var(--meta-color)]Bus Rapid Transit System (BRTS) ( அ.பூஜா )[/color]
[color=var(--content-color)]பஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம்... சுருக்கமாக BRTS. சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மாநகரப் பேருந்துகளின் பயண நேரத்தைக் குறைக்கவும் தமிழக அரசு கையில் எடுத்திருக்கும் புதிய முயற்சி இது. சென்னைக்குதான் இந்த BRTS புதிது, இந்தியாவில் ஏற்கெனவே புனே, விஜயவாடா, சூரத், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த BRTS வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல ஆசிய கண்டத்தில் மட்டும் மொத்தம் 43 நகரங்களில், 1593 கி.மீ தூரத்திற்கு BRTS இருப்பதாகக் குறிப்பிடுகிறது உலக BRT அமைப்பு. இந்த BRTS-ஐ சென்னையிலும் அமல்படுத்துவதற்காக 2011-லேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயலாக்க அறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் இதை விரிவாக உருவாக்கும் பொறுப்பு ICRA மேனேஜ்மென்ட் கன்சல்ட்டிங் சர்வீசஸ் லிமிடட் என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F0a0439aa-048d-45c9-b...2Ccompress]
BRTS-ல் பயணிகள் தகவல் மையம்
[/color]
[color=var(--content-color)]இந்நிறுவனம் அந்தச் செயலாக்க அறிக்கைகளை ஆராய்ந்து, சென்னையில் BRTS-ஐ செயல்படுத்துவதற்கான ஏழு வழித்தடங்களை தேர்வுசெய்து அதற்கான திட்ட வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது. இதற்கடுத்து இந்த ஏழு வழித்தடங்களிழும் உள்ள மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை தற்போது நடத்திவருகிறது பல்லவன் போக்குவரத்து ஆலோசனை சேவை நிறுவனம். இந்த BRTS எப்படிச் செயல்படும், எப்படிப் பாதைகள் வடிவமைக்கப்படும் போன்ற அனைத்துத் தகவல்களும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு பின்னர் கருத்துகள் கேட்கப்பட்டன. முதல்கட்டமாக கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது.[/color]
ADVERTISEMENT



POWERED BY PLAYSTREAM
[Image: mute.png]

[color=var(--content-color)]இந்த BRTS எப்படிச் செயல்படும்?[/color]
[color=var(--content-color)]தற்போது இருக்கும் பொதுவான போக்குவரத்துச் சாலைகளில் இந்த BRTS-க்காக தனிவழி அமைக்கப்படும். இந்த வழி ஏற்கெனவே இருக்கும் சாலைகளின் மையத்தில் அமையும். இதற்கு இருபுறமும் வழக்கம்போல பிற வாகனங்கள் பயணிக்கும். இந்தப் பிரத்யேக தனிவழியானது தடுப்புகள் மூலம் பிரிக்கப்படும். இந்த வழிகளைக் கண்காணிக்க தனி கேமராக்களும் பொருத்தப்படும்.
பேருந்துகள் பொதுப் போக்குவரத்திலிருந்து விலகிவிடுவதால், வழக்கமான சாலைகளில் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்காது என்பதால் வழக்கத்தைவிடவும் விரைவாகச் செல்லும்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Faf625013-362f-4130-8...2Ccompress]
கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடம்
[/color]
[color=var(--content-color)]தற்போது இருக்கும் வழக்கமான பேருந்துகள் போல் இல்லாமல், இந்த BRTS பேருந்துகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். எப்படி மெட்ரோ ரயில்களில் படிகளின்றி நேரடியாக ஏறுகிறோமோ, அதேபோல இதிலும் ஏறமுடியும். இதற்கான, பேருந்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 09-08-2019, 09:43 AM



Users browsing this thread: 68 Guest(s)