09-08-2019, 09:37 AM
(This post was last modified: 09-08-2019, 09:39 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
காஷ்மீரில் பதற்றம் : பெல்லெட் குண்டு காயங்களுடன் ஓடிய சிறுவன் பலி..!
By
Sathiyam Digital
-
07/08/2019 9:21 PM
[/url][url=https://www.stumbleupon.com/submit?url=https://www.sathiyam.tv/kashmir-crpf-attack-on-17-yrs-boy-children/&title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..!]
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அம்மாநிலத்திற்கான அதிகாரத்தை ரத்து செய்ததையடுத்து இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி கடந்த 5 ஆம் தேதி மத்திய அரசால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பே இராணுவப்படை குவிப்பு, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைப்பு என தொடர்ந்து நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

மசோதா தாக்கல் செய்யும் நேரத்தில் காஷ்மீர் முழுவதும் முந்தைய நாளே 144 தடை, தொடர்புசாதனங்கள், இணையதள சேவைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இந்த நிலையில் தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசொதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து காஷ்மீர் மக்களின் மனநிலை என்பது குறித்தான செய்தியை வெளியிடுவதற்கு கூட அங்குள்ள மத்திய அரசின் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும், அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதியன்று காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாளன்று, ஒசைப் அல்தாஃப் என்ற 17 வயது சிறுவன் ஒரு விளையாட்டு திடலில் விளையாடி கொண்டிருக்கும்பொழுது துணை ராணுவப்படையினரின் பெல்லட் குண்டு தாக்குதல் அறங்கேறியுள்ளது.
அப்போது துணைராணுவப்படையினரின் தாக்குதலுக்கு பயந்து ஓடியதில் ஒரு ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனுடன் விளையாடிய மற்ற இளைஞர்களும் ஆற்றில் குதித்துள்ளனர்.
அவர்களை அங்கு இருந்த ஒரு சில மணல் அள்ளும் தொழிலாளர்கள் காப்பாற்றினாலும் நீச்சல் தெரியாத ஒசைப் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனையில், அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு அவரது தந்தை அல்தாஃப் மராஸியுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் 13 பெல்லெட் குண்டுகளின் காயங்கள் இருந்தன எனவும், பெரும்பாலும் கண்களில் காயங்கள் இருந்தன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள இருவரையும் அங்குள்ள ஊர் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து கூறிய சிறுவனின் தந்தை, தனது மகன் சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்ததாக தெரிவிக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் இந்த தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கக்கூடாது என அரசு அதிகாரிகள் மிரட்டியதாகவும், அதனால் தாங்கள் எந்த தகவலையும் அளிக்கமுடியாது எனவும் தனியார் செய்தி நிறுவன செய்தியாளரிடம் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி ஆதாரம் :https://www.huffingtonpost.in/entry/kashmir-first-civilian-casualty-after-article-370-revoked_in_5d4ab624e4b0066eb70aaca3
first 5 lakhs viewed thread tamil