Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நீலகிரியை துவம்சம் செய்தது வரலாறு காணாத மழை.. அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செமீ மழை பொழிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது. முன்னதாக அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 82 செ.மீ மழை பெய்து இருந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 7 நாளாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் உப்ட மொத்த நீலகிரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் மழையால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். மின்சாரமும் பல இடங்களில் இல்லாததால் இருளில் மூழ்கி மக்கள் தவிக்கிறார்கள். வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


[Image: heavyrainfallinthenilgiris126-1565321873.jpg]


இதனிடையே அவலாஞ்சியில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவாக 82 செ.மீ மழை பெய்தது. அதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது.இன்னும் மழை பெய்து வருகிறது. இதனால் அவலாஞ்சியை சுற்றியுள்ள பகுதிகயை வெள்ளம் சூழந்துள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது அங்கு 24 மணி நேரமும் பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


[Image: heavyrainfallinthenilgiris12-1565321880.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 09-08-2019, 09:33 AM



Users browsing this thread: 104 Guest(s)