08-08-2019, 05:30 PM
என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா... கேப்மாரியும் 50 மும்பை அழகிகளும்
சென்னை:கேப்மாரி என்கிற சி.எம். படத்திற்காக நாயகன் ஜெய் உடன் 50 மும்பை அழகிகள் ஆடும் பாடல் காட்சி சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
இளம் நாயகன் ஜெய்யும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைப்பில் உருவாகும் படம் தான் கேப்மாரி என்கிற சி.எம். இது ஜெய்யிற்கு 25ஆவது படமாகும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 70ஆவது மற்றும் கடைசி படமாகும். இந்தப்படத்துடன் இவர் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதனால் இந்த படத்தை இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில், காதல், காமெடி, கவர்ச்சி, இளமைக் குறும்புகளுடன், அனைத்து அம்சங்களையும் கொண்டதாக மொத்தத்தில் இன்னொரு செந்தூரப் பாண்டி படம் போல் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு செந்தூரப் பாண்டி எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதே போல் ஜெய்யிற்கும் கேப்மாரி என்கிற சி.எம் படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான படங்கள் பெரும்பாலும் அரசியல் வாடை அதிகமாக இருக்கும். அதே போல் இந்தப் படமும் இருக்கக்கூடும். இந்தப் படத்தின் கதையானது இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்கக்கூடாது, எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே கூறி இருக்கிறார்.![[Image: capmaari-engira-cm-movie-photos-1565169080.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/capmaari-engira-cm-movie-photos-1565169080.jpg)
கேப்மாரி என்கிற சி.எம் படத்தில், நாயகன் ஜெய் உடன் இந்தப் படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இதற்காக விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா
என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் ஃபுல்லாக படமாக்கப்பட்டது.
இந்தப் பாடலுக்காக நாயகன் ஜெய் அதிக சிரத்தை எடுத்து சிறப்பாக நடனமாடி உள்ளார். தெறி, பேட்ட ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீஃப் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
படத்தில் இடம் பெற்றள்ள ஒவ்வொரு காட்சியும் இன்றைய இளைஞர்களை விசிலடித்து துள்ளாட்டம் போட வைக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். கேப்மாரி என்கிற சி.எம் படம் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்பு இவர் இயக்கும் படமாகும். 2015ஆம் ஆண்டு டூரிங் டாக்கிஸ் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்திருந்தார்
சென்னை:கேப்மாரி என்கிற சி.எம். படத்திற்காக நாயகன் ஜெய் உடன் 50 மும்பை அழகிகள் ஆடும் பாடல் காட்சி சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
இளம் நாயகன் ஜெய்யும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைப்பில் உருவாகும் படம் தான் கேப்மாரி என்கிற சி.எம். இது ஜெய்யிற்கு 25ஆவது படமாகும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 70ஆவது மற்றும் கடைசி படமாகும். இந்தப்படத்துடன் இவர் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதனால் இந்த படத்தை இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில், காதல், காமெடி, கவர்ச்சி, இளமைக் குறும்புகளுடன், அனைத்து அம்சங்களையும் கொண்டதாக மொத்தத்தில் இன்னொரு செந்தூரப் பாண்டி படம் போல் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு செந்தூரப் பாண்டி எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதே போல் ஜெய்யிற்கும் கேப்மாரி என்கிற சி.எம் படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான படங்கள் பெரும்பாலும் அரசியல் வாடை அதிகமாக இருக்கும். அதே போல் இந்தப் படமும் இருக்கக்கூடும். இந்தப் படத்தின் கதையானது இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்கக்கூடாது, எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே கூறி இருக்கிறார்.
![[Image: capmaari-engira-cm-movie-photos-1565169080.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/capmaari-engira-cm-movie-photos-1565169080.jpg)
கேப்மாரி என்கிற சி.எம் படத்தில், நாயகன் ஜெய் உடன் இந்தப் படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இதற்காக விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா
என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் ஃபுல்லாக படமாக்கப்பட்டது.
இந்தப் பாடலுக்காக நாயகன் ஜெய் அதிக சிரத்தை எடுத்து சிறப்பாக நடனமாடி உள்ளார். தெறி, பேட்ட ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீஃப் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
படத்தில் இடம் பெற்றள்ள ஒவ்வொரு காட்சியும் இன்றைய இளைஞர்களை விசிலடித்து துள்ளாட்டம் போட வைக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். கேப்மாரி என்கிற சி.எம் படம் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்பு இவர் இயக்கும் படமாகும். 2015ஆம் ஆண்டு டூரிங் டாக்கிஸ் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்திருந்தார்
first 5 lakhs viewed thread tamil