Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கம்...!

[Image: simbu21.png]

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார். 
சிம்புவின் அன்பும், நட்பும் தொடரும் என கூறியுள்ள அவர், இதுவரை தம் மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தமது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை...
“வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. 
மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 
அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 08-08-2019, 05:27 PM



Users browsing this thread: 1 Guest(s)