08-08-2019, 05:21 PM
நோ, நோ' என்று சொல்லிவிட்டு நுழைந்த கஸ்தூரி
பிக்பாஸ் 3 வீட்டிலிருந்து சரவணன் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதனால் குறைந்து போன ஒரு போட்டியாளருக்குப் பதிலாக வைல்டு கார்டு மூலம் யாராவது நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே அதில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்வார் என்று தகவல் பரவியது. ஆரம்பமான பின்னும் அடிக்கடி அந்த தகவல்கள் செய்தியாகவும் வெளிவந்தன.
இல்லை, இல்லை என்று சொன்னாலும் மீண்டும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகிறேன் என செய்திகள் வருகிறது என்று கஸ்தூரியும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில் இன்று(ஆக.,8) காலை ஒளிபரப்பான புரோமோவில் கஸ்தூரி வீட்டில் திடீரென நுழையும் காட்சி ஒளிபரப்பானது. அடுத்து சற்று முன் ஒளிபரப்பான புரோமோவிலும் கஸ்தூரி தான் இடம் பெற்றுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக கஸ்தூரி போட்டியாளராக நுழைந்துள்ளார் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் புரோமோக்களை மட்டும் வெளியிட்டிக் கொண்டிருக்கிறார்கள். 'கருத்து' கஸ்தூரி என அழைக்கப்படும் கஸ்தூரி நுழைவால் பிக்பாஸ் வீடு களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

first 5 lakhs viewed thread tamil