08-08-2019, 05:19 PM
[color=var(--title-color)]இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!’ - டிராவிட்டுக்காக கொதித்த கங்குலி[/color]
[color=var(--title-color)]கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்.[/color]
[color=var(--meta-color)]கங்குலி[/color]
[color=var(--content-color)]இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகிறது. பல முன்னாள் வீரர்கள் ஐபிஎல் அணி மற்றும் பிசிசிஐ-யின் சில முக்கிய பொறுப்பு என ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் இருப்பதாக குற்றச்சாட்டு அடிக்கடி வருவது உண்டு.[/color]
[color=var(--content-color)]
கங்குலி, சச்சின் லட்சுமண்
[/color]
[color=var(--content-color)]இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, சச்சின், லட்சுமண் ஆகியோரும் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினர். இதற்கான விளக்கங்களும் அந்த வீரர்கள் அளித்தனர். சச்சின் தான் மும்பை அணியின் ஆலோசகரா இருப்பதற்கு எந்தப் பணமும் வாங்குவதில்லை என்று தெரிவித்தார். லட்சுமண், தான் இரு பொறுப்புகளில் இருப்பது சட்ட விதிகளுக்கு முரண் என்றால் ஒன்றில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்தார்.[/color]
[color=var(--content-color)]இந்நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா ஒரு புகாரை ராகுல் டிராவிட்டுக்கு எதிராகக் கொடுத்துள்ளார். இவர் தான் சச்சின் மற்றும் லட்சுமணுக்கு எதிராகவும் புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[/color]
[color=var(--content-color)]
ராகுல் டிராவிட்
[/color]
[color=var(--content-color)]இந்தப் புகாரைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் நன்நெறி அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதியான டி.கே ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சஞ்சீவ் குப்தா தன்னுடைய புகாரில், ``நேஷ்னல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் ஆதாயம் தரும் இரு பதவிகளில் டிராவிட் இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளா.
[color=var(--content-color)]இது தொடர்பாக பேசிய டி.கே ஜெயின், ``கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அவரது பதிலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.[/color]
[color=var(--content-color)]
டிராவிட் - கங்குலி
[/color]
[color=var(--content-color)]இந்நிலையில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் கங்குலி கடுமையாக சாடியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கங்குலி, ``இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபேஷன்... இந்த `ஆதாய முரண்’... செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக கங்குலியும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பதவி மற்றும் ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு ஆலோசகர் என இரு ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.[/color]
[color=var(--content-color)]கங்குலியின் கருத்தை ஹர்பஜன் சிங்கும் வரவேற்றுள்ளார். கங்குலியின் ட்வீட்டை குறிப்பிட்டு, ``இது உண்மையா....? நாம் எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இவரை (டிராவிட்டை) விட சிறந்த நபர் கிடைக்க மட்டார். இதுபோன்ற லெஜண்டுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல். கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு அவர்களின் சேவை தேவை.. ஆம், இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.[/color]

first 5 lakhs viewed thread tamil