Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
எல்லைச் சுவருக்காக அவசர நிலையைப் பிரகடனம் செய்வேன்: ட்ரம்ப் மிரட்டல்

[Image: DwMZEHrV4AEvW9djpg]
எல்லைச் சுவருக்காக நான் அவசர நிலையைப் பிரகடனம் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, ''அடுத்து வரும் நாட்களைப் பொறுத்து நான் தேசிய அளவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவேன்'' என்றார்.
எல்லைச் சுவருக்காக ராணுவ நிதியைப் பயன்படுத்தும் முடிவில் ட்ரம்ப் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் மெக்சிகோ எல்லையில் கட்டப்படவுள்ள சுவருக்கான நிதி அளிக்க ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.
ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால், இந்த நிதியாண்டுக்குச் செலவீனத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இதனால் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷட்டவுன் தொடங்கி 3 வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 07-01-2019, 05:27 PM



Users browsing this thread: 100 Guest(s)