Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]2003-ல் ஏற்பட்ட அந்த வலி இன்னும் மறையவில்லை' - ஷோயப் அக்தர் பகிர்ந்த `ரகசியம்!'[/color]

[color=var(--title-color)]2003-ல் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி குறித்தும், தனக்கு அன்றைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அக்தர் தற்போது பேசியுள்ளார்.[/color]
[Image: vikatan%2F2019-08%2Ffaa1b49c-07ba-4d5b-9...2Ccompress][color=var(--meta-color)]ஷோயப் அக்தர்[/color]
[color=var(--content-color)]உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாறு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களால் இந்தியாவிடம் தோற்றுவருகிறது பாகிஸ்தான். ஆனால், 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் சம பலத்துடன் மோதியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் சயீத் அன்வரின் சதத்துடன் 273 ரன்கள் எடுத்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F9b531128-e30b-484b-b...2Ccompress]
சச்சின்
[/color]
[color=var(--content-color)]வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் என வலுவான பௌலிங் யூனிட்டை வைத்திருந்த பாகிஸ்தான் இந்திய அணியை விரைவில் சுருட்டிவிடும் என அந்நாட்டு ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சச்சின், அவர்களின் நினைப்பை தகர்த்தார். சச்சின் 98, டிராவிட் 44, யுவராஜ் 50 என ரன்கள் குவித்து பாகிஸ்தானின் பௌலிங் யூனிட்டையும் நொறுக்கினார்கள். இந்தப் போட்டியில் அதிக ரன்களை வாரி கொடுத்தவர் என்றால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் ஷோயப் அக்தர்தான். இந்தப் போட்டியில் 72 ரன்கள் இவர் விட்டுக்கொடுத்தார்.[/color]
[color=var(--content-color)]இதற்கிடையே, 2003-ல் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி குறித்தும், தனக்கு அன்றைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அக்தர் தற்போது பேசியுள்ளார். அதில், ``எனது கிரிக்கெட் கேரியரிலேயே எனக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு என்றால் அது 2003-ல் நிகழ்ந்த அந்தத் தோல்விதான். 273 என்ற நல்ல ஸ்கோர் எடுத்திருந்தும், நல்ல பௌலிங் லைன் அப் வைத்திருந்தும் எங்களால் இந்திய அணியைத் தடுக்க முடியவில்லை. அன்றைக்கு என்னுடைய மோசமான பௌலிங்க்கு காரணம் என்னுடைய ஃபிட்னஸ்தான்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F8ee938f7-2d0a-43be-b...2Ccompress]
ஷோயப் அக்தர்
[/color]
[color=var(--content-color)]மேட்சுக்கு முந்தைய நாள் கால் வலியால் அவதிப்பட்டு வந்த எனக்கு இடது முழங்காலில் 5 ஊசிகள் போடப்பட்டன. பந்துவீச்சைத் தொடங்கியபோது, ஊசியால் என் இடது முழங்கால் உணர்ச்சியற்றுப் போயிருப்பதைக் கவனித்தேன். இதனால் என்னால் சரியாக ஓடக்கூட முடியவில்லை. முடிவில் எனது பௌலிங் மோசமானது. சச்சின், சேவாக்கும் எளிதில் எங்கள் பௌலிங்கை சமாளித்தார்கள். குறிப்பாக, சச்சின் எனது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். அவர்களுக்கு எப்படி பந்துவீசுவது, ஆட்டத்தில் எப்படி திருப்பத்தை ஏற்படுத்துவது என்பது போன்ற எந்த ஐடியாவும் அன்றைக்கு எனக்குத் தோன்றவில்லை.

[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-08-2019, 05:18 PM



Users browsing this thread: 96 Guest(s)