Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று(ஆக.,7) ஒரேநாளில் சவரன் ரூ.568 உயர்ந்து இருப்பதுடன், ரூ.28 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,544க்கும், சவரன் ரூ.28,352க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,010க்கும் விற்பனையாகிறது.




[Image: Tamil_News_large_2338606.jpg]





வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்து ரூ.46,800க்கு விற்பனையாகிறது. 

கடந்த ஆக.,1ல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,310ஆக இருந்த நிலையில் இன்று ரூ.3,544ஆக உயர்ந்துள்ளது. ஒருவாரத்தில் மட்டும் ரூ.1,872 அதிகரித்துள்ளது. 


[Image: gallerye_113646375_2338606.jpg]






சர்வதேச சந்தைகளில் பொருளாதார சூழல் ஸ்திரமற்ற தண்மையில் இருப்பதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக தங்கம் - வெள்ளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-08-2019, 05:15 PM



Users browsing this thread: 100 Guest(s)