07-08-2019, 05:12 PM
சென்னையில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்
சென்னை அடுத்த பெரம்பூரில் பயணிகள் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் பயணிகள் காயம் அடைந்தனர்.
சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் ரயிலில் திடீரென பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த ரயில் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்தை அடைந்தப்போது, மாணவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு மோதலில் ஈடுபட்டனர். மேலும் கற்களை கொண்டும் தாக்கினர்.
இதில் ரயிலில் வந்த பயணி ஒருவர் காயமடைந்தார். இதனால் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவலறிந்து ரயில்வே காவல்துறையினர் அங்கு விரைவதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். எனினும் ஒரு மாணவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

first 5 lakhs viewed thread tamil