07-08-2019, 12:02 PM
தன் அத்தை மகள் கிருத்திகா.. தான் மனதார நேசிக்கும் தேவதை.. இவ்வளவு சுலபமாக தன் வசமாவாள் என்று நவநீதன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.
வெளியே பெய்யும் மிதமான மழை காரணமோ என்னவோ.. அவன் அணைப்புக்குள் வந்தவள்.. உதட்டில் கொடுத்த முத்தத்தையும் மறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
இதற்கு மேலும் அவன் தன் காதலை அவளிடம் சொல்லித்தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமா என்ன...??? அதற்கான அவசியம் இருக்கப் போவதில்லை என.. எண்ணிய நவநீதன்.. உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவனது உதட்டு முத்தத்தை ரசித்து.. ஏற்று.. பின் உதடுகள் பிரித்து.. முகம் திருப்பிக் கொண்டாள் கிருத்திகா. அதன் பின்.. அவன் அவளை மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது..
''ச்சீ.. சும்மா இரு.. '' என சிரித்தபடி அவன் முகத்தில் கை வைத்து தள்ளி விட்டாள்.!
அவனுக்கு இன்னும் அவளை சுவைக்க வேண்டுமென மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் அவள் விருப்பத்தை மீறி அவளை முத்தமிடவும் அவன் விரும்பவில்லை.
உடனே அவன் மடியில் இருந்து விலகி விடாமல்.. மேலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த பின்பே.. அவன் மடியை விட்டு மெதுவாக எழுந்து போய் ஜன்னல் பக்கத்தில் நின்றாள். வெளியே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியிருந்தது. ஆனால் காற்றில் நல்ல குளிர். மழையின் வேகம் குறைந்திருப்பதைப் பார்த்துச் சொன்னாள்.
'' மழை நிக்குது..!!''
'' என்ன.. மழை நிக்குதா.?''
'' ம்ம்ம் ''
'' எங்க.. ?''
'' என்ன எங்க.. ? வெளிய பாரு நல்லா..!''
அவனும் எழுந்து அவள் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தான். ஜன்னல் வழியாக தெரிந்த மழைத் துளிகள் அடர்த்தி குறைவாகிக் கொண்டிருந்தது. அவன் சிரித்தபடி சொன்னான்.
''மழையால நிக்க முடியாது. ஒண்ணு விடும். இல்ல விழும்..''
சைடாக பார்த்து அவனை லேசாக முறைத்தாள் கிருத்திகா. ஆனால் உதட்டோரம் மெல்லிய புன்னகை வெளிப்பட்டது.
'' அய்யே.. அறிவ்வு.."
அவன் கிறக்கமாகப் புன்னகைத்தபடி அவளை அணைக்கப் போனான். அவள் மெதுவாக நகர்ந்து அவன் கையை விலக்கினாள்.
"சூடா டீ குடிச்சா நல்லாருக்கும்ல?"
"ஆனா.. பால் இல்லையே?"
"நான் போய் வாங்கிட்டு வரேன்"
"நீயா..? வேண்டாம். நானே போறேன்"
"இரு.. இரு. நீ போக வேண்டாம். நானே போயிட்டு வரேன்" என்று நகர்ந்து போனாள் கிருத்திகா.
அவள் தன்னிடம் இருந்து தப்பிக்க விரும்புவதைப் போல உணர்ந்தான்.
மழை விட்டதும்.. லேசான தூரலில் நனைந்த படியே பால் வாங்க கடைக்கு போய் விட்டாள் கிருத்திகா. இன்னும் கரண்ட் வராரதால்.. வீட்டுக்குள் இப்போது கொஞ்சம் அதிகப்படியான இருள் கவிந்திருந்தது. அவன் மொபைல் டார்ச்சை ஆன் பண்ணி வைத்தான்.
பால் கவரை கையில் பிடித்தபடி தபதபவென ஓடிவந்த கிருத்திகா.. வீட்டுக்குள் வந்ததும் சொன்னாள்.
'' எல்லாருமே இந்த ட்ரஸ் சூப்பரா இருக்குனு சொன்னாங்க.. ''
'' எல்லாரும்னா.?'' அவன் சமையற் கட்டின் பக்கத்தில் வந்து நின்றிருந்தான்.
'' கடைல.. நிறைய பேரு நின்றுந்தாங்க..'' அவனிடம் சொல்லி விட்டுப் போய் அடுப்பை பற்ற வைத்தாள். பால் பாத்திரத்தை எடுத்து.. பால் கவரை பல்லால் கடித்து உடைத்து.. பாத்திரத்தில் ஊற்றி.. பாலை அடுப்பில் வைத்து தண்ணீர் கலந்தாள்.!!
அவளுக்கு பக்கமாக போய் நின்று கொண்டு.. அவள் செய்வதை ஒரு வித காதல் நிறைந்த ஆவலுடன் பார்த்தான் நவநீதன் !! எதுவும் பேசத் தோன்றாமல்.. அவள் பக்கத்தில் அப்படி நிற்பதும்.. அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.!!
'' கடைல இப்பதான் போண்டா போட்டுட்டு இருக்காங்க.." என்றாள்.
"ஏன் வேணுமா?"
"டீ க்கு கடிச்சிக்க போண்டா இருந்தா சூப்பரா இருக்கும் !!''
'' என்ன போண்டா ??''
''கிழங்கு போண்டா.. ''
'' நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ??''
'' ம்ம். ஆனா இப்பதான் போட்றுக்காங்க.. கடைலயும் நல்ல கூட்டம் இருந்துச்சு.. இந்த மழைக்கும் அதுக்கும் நல்ல வேவாரம்தான் அவங்களுக்கு !!''
'' அப்ப நான் போய் வெய்ட் பண்ணி வாங்கிட்டு வரேன்.. லேட்டா போனா கிடைக்காது. நீ டீ வெய்.. !!''
'' ம்ம் '' திரும்பி அவனைப் பார்த்து அவள் சிரித்த ஒரு சிரிப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
'நான் முத்தமிட்டு சுவைத்த அந்த உதடுகள்தான்.. அவள் சிரிக்கும்போது என்ன ஒரு அழகாக விரிந்து மலர்கிறது.. !!! ஹ்ஹா.. !!' அவன் கர்வம் கொண்ட நெஞ்சுடன்.. போண்டா வாங்க போனான். கிழங்கு போண்டா.!
கடையில் நன்றாக கூட்டம் சேர்ந்திருந்தது. மழைக்கு இதமாக டீ குடிக்க நிறைய பேர் வந்திருந்தனர். சிறிது நேரம் காத்திருந்து சூடான கிழங்கு போண்டாவை ஆளுக்கு இரண்டு என நவநீதன் வாங்கிக் கொண்டு போனபோது.. வாசற்படி பக்கத்தில் வந்து.. தன் இரண்டு கைகளையும் மார்பில் குறுக்காக கட்டிக் கொண்டு.. இன்னும் லேசாக தூரிக் கொண்டிருக்கும் மழையை.. அமைதியாக நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. !!!
அவளின் தோளில் மெல்லத் தட்டி.. கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை கலைத்து விட்டு உள்ளே போனான். இரண்டு டம்ளர்களில் டீயை ஊற்றி ஆவி பறக்க வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தார்கள்.!
போண்டா பற்றி பேசியவாறு டீ குடித்த போது.. நவநீதனின் மனம் அவன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடித்தது.. !!
இவ்வளவு தூரம் வந்த பிறகு அதை மட்டும் ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்..? எப்படியும் அவள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள்.. அப்படி ஏற்றுக் கொண்டால்.. இன்னும் சில முத்தங்கள் கிடைக்குமே.? அத்தை வரும்வரை.. மிகவும் உல்லாசமாக நேரத்தை ஓட்டலாமே.
'' உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் கிருத்தி..'' டீயை உறிஞ்சி விட்டு அவளைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்.
'' ம்ம்.. ? என்ன.?''
'' கொஞ்சம் தயக்கமா இருக்கு..''
'' பரவால்ல சொல்லு.. ??''
'' ஐ லவ் யூ சோ மச்.. !!!''
'' ஹ்ஹா.. !!!'' டீயை தள்ளிப் பிடித்துக் கொண்டு 'பக் 'கெனச் சிரித்தாள் கிருத்திகா.
அவள் அப்படி சிரித்தது அவனுக்கு திகைப்பாக இருந்தது. போண்டாவுக்குள் மசாலாவுடன் இருந்த கிழங்கை விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே சொன்னாள். !
''நினைச்சேன்.. நீ இதைத்தான் சொல்வேனு.. !! நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்ட..!!!''
'' அப்படியா.. அப்ப நீயும் இதை எதிர் பார்த்தியா..??''
'' ம்ம்.. இப்ப கொஞ்ச நாளாவே உன்கிட்ட இருந்து இந்த மாதிரி எதிர் பாத்துட்டுதான் இருந்தேன்.!! நீ கிஸ் பண்ணப்பவே.. இதை சொல்வேனு நினைச்சேன். !!! சரி.. எப்பருந்து.. ?''
'' என்னது. ?''
'' என்னை நீ லவ் பண்றது ?''
''ம்ம்.. இங்க வந்து ஒரு... ஆறு மாசம் கழிச்சு.. உன் மேல லவ் வந்துருச்சு.. ''
'' ம்ம்.. அப்படின்னா.. ஒரு வருசமா என்னை லவ் பண்ணிட்டு இருக்க.. ??''
'' ம்ம் ''
'' இவ்ளோ நாள்.. நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல. ?''
'' அ.. அது.. அது.. ஒரு தயக்கம்.. கொஞ்சம் பயம்... ''
'' ஏன்.. என்ன பயம்.. ?''
'' நீ ஏத்துக்குவியோ மாட்டியோனுதான்''
'' சரி.. இப்ப மட்டும் எப்படி சொன்ன..?''
'' இன்னிக்கு உன் பர்த்டே.. பத்தாததுக்கு.. நீ மழைல நனைஞ்சிட்டு வந்து என் மடில உக்காந்து... ஒரு மாதிரி ஆகி... நாம கிஸ் பண்ணி... '' சொல்ல முடியாத சிரிப்புடன் நவநீதன் அவளைப் பார்த்தான்.
அவனை போல அல்லாமல்.. மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் கிருத்திகா.. !!
அதே நேரம் சட்டென கரண்ட் வந்தது.
'' பளிச்.. பளிச்.. '' என விளக்குகள் எரியத் தொடங்கின.
மழை விட்டிடிருந்தாலும்.. ஈரக் காறறில் பரவிய குளிர் இன்னும் குறையவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியாக இப்போது உள்ளே பரவிய காற்று.. சிலுசிலுவென வீசி உடம்பில் இருந்த மெல்லிய ரோமங்களை எல்லாம் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் இருந்த விளக்குகள் எல்லாம் பளிச்சென எரிந்து கொண்டிருக்க.. ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருக்கும் கிருத்திகாவை இப்போதுதான்.. வெளிச்சத்தில் நன்றாக ரசித்துப் பார்த்தான் நவநீதன்.!!!
கிருத்திகாவின் அந்த மிளிரும் அழகும்.. ஆடையின் எடுப்பும்.. அவனுக்குச் சொந்தமானது என்று எண்ணி.. அவன் மனம் மிகவும் கர்வம் கொண்டது.. !!!
டீயை குடித்த பின்.. டம்ளரைக் கட்டில் மீது வைத்து விட்டு.. கட்டிலை விட்டு இறங்கிப் போய்.. டிவியை ஆன் பண்ணினாள் கிருத்திகா.!! கேபிள் கனெக்சன் கட்டாகியிருந்தது.!!!
டிவியை அப்படியே விட்டு விட்டு மெதுவாக வந்து கட்டிலில் உள்ளே தள்ளி.. கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் கிடந்த தலையனை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.!!!
'' நீ பதிலே சொல்லல கிருத்து.. '' நவநீதன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
'' என்ன பதில். ??'' முகத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகம் கொஞ்சம் சீரியஸாக இருப்பதை பார்த்து அவனுக்கு கவலை வந்தது.
'' நான் உன்னை லவ் பண்றேனு சொன்னேனே..?''
'' ம்ம்.. யோசிச்சிட்டிருக்கேன் ''
'' இதுல யோசிக்க என்ன இருக்கு.?''
'' ஏன்.. இல்லையா ??''
'' சரின்னா ஓகே சொல்லு.. இல்லேன்னா நோ சொல்லு.. ''
'' அது போதுமா ??'' தன் முட்டை கண்களை விரித்து.. அவன் மேல் பரிதாபப் படுபவளைப் போல ஒரு பார்வையை வீசினாள்.
'' போதும்."
'' அப்ப.. நோ தான்.. !!!'' என்றாள்.
அவள் விளையாட்டாகச் சொல்வதாக எண்ணினான் நவநீதன். ஆனால் அவள் முகத்தில் சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்த போது அவனை கவலை கவ்விக் கொண்டது.
'' ஏன்...????''
'' நீதான் டீடெய்ல்ஸ் எல்லாம் கேக்க மாட்டேன்னியே. ?''
'' அப்ப... நிஜமா.. நீ என்னை லவ் பண்லயா. ?''
'' அய்யோ.. இதான்.. நான் எப்படி சொல்றதுனு யோசிச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்... ஆனா.. ஸாரி.. நான் உன்ன லவ் பண்ணல..''
அவன் நெஞ்சின் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது. அவள் பொய்யாகவோ.. விளையாட்டாகவோ அதைச் சொல்லவில்லை என்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது..!!!