Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தாறுமாறாக அதிகரிக்கப்போகும் தங்கத்தின் விலை... இரண்டு மடங்காக உயர வாய்ப்பு..!

[Image: pjimage--9--jpg_710x400xt.jpg]
[Image: facebook_icon.svg][Image: twitter_icon.svg][Image: redit_icon.svg]
HIGHLIGHTS
 ஜூலை மாதம் இந்தியா இறக்குமதி செய்துள்ள தங்கத்தின் அளவு 39.66 டன். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 88.16 டன்


பெண்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கத்தின் விலையேற்றம் அங்கத்தை பதபதக்க வைத்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட தங்கம் இனி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கப்போகிறது. [Image: gold1-jpg.jpg]
ஜூன் மாதம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகி உள்ளது. உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அளவில் பாதிக்கும் கீழே சென்றுவிட்டது.[Image: pjimage--18--jpg.jpg] 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் தொட்டிருக்கிறது. ஜூலை மாதம் இந்தியா இறக்குமதி செய்துள்ள தங்கத்தின் அளவு 39.66 டன். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 88.16 டன். இதேபோல இந்தியாவிலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்யப்படுவதும் 42 சதவீதம் வீழ்ச்சியுற்று இருக்கிறது. ஜூன் 2019ல் இந்தியாவின் தங்க ஏற்றுமதி மதிப்பு 1.71 பில்லியன் டாலர்.[Image: gold-jpg.jpg]
தங்கத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதமும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டைவிடக் குறைவாகவே இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதாக அறிவித்தார். அதிலிருந்து தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்து வருகிறது.
விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவை செப்டம்பர் 2019 மாதத்தில் குறைந்துவிடும் என உலக தங்க கவுன்சில் கூறுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 06-08-2019, 05:46 PM



Users browsing this thread: 83 Guest(s)