Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மாற்றப்படுகிறது வாட்ஸ்ஆப்பின் பெயர்; பேஸ்புக் அதிரடி! பின்னணி என்ன?

நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இந்த யோசனையை வாங்கியதே பேஸ்புக் தலைவர் ஆன மார்க் ஜுக்கர்பெர்க் தான்.

[Image: facebook-force-whatsapp-to-change-the-name-why.jpg]மாற்றப்படுகிறது வாட்ஸ்ஆப்பின் பெயர்; பேஸ்புக் அதிரடி! பின்னணி என்ன?
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? பெயர் மாற்றுவதற்கான அவசியமும் பின்னணியும் என்ன? வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் புதிய பெயர்கள் என்னவாக இருக்கும்? 

தாய் நிறுவனமான பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த முடிவானது இந்த இரண்டு சோஷியல் ஆப்ஸ்களை அதிக அளவில் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி ஆகும். பேஸ்புக் நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமை வாங்கியதும், பின் 2014 ஆண்டில் வாட்ஸ்ஆப்பை வாங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன? 

நிகழ்த்தப்படவுள்ள இந்த பெயர் மாற்றமானது, மூன்று ஆப்ஸ்களையும் (பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம்) ஒன்றாக இணைத்து பேஸ்புக் பேனரின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு பகுதியாகும். 

திடீரென்று ஏன் இந்த முடிவு?

பேஸ்புக் நிறுவனமானது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டையும் வாங்கியதிலிருந்து, அவைகள் பெரும்பாலும் தனித்து இயங்குவதற்கான உரிமைகளை கொடுத்து வந்தது. அதாவது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டுமே பேஸ்புக்கிற்கு சொந்தமான ஆப்ஸ்கள் என்கிற வெளிப்படையான பிராண்டிங்கை உள்ளடக்கமாக கொண்டிருக்கவில்லை. பெயர் மாற்றம் செய்யவதின் மூலம், இந்த இரண்டு ஆப்ஸ்களை பயன்படுத்தும் எவருக்கும், இவைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதும், இவைகள் பேஸ்புக் நிறுவனத்துடையது என்பதும் எளிமையாக புரியவரும். 

புதிய பெயர் என்ன?

மாற்றம் காணும் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் பெயர்கள் ஆனது பேஸ்புக்கின் உள் வர்த்தகத்தில் மட்டுமின்றி, கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலும் கூட புதிய பெயரின் கீழ் தான் தோன்றும். இருந்தாலும் கூட, ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்க்ரீனில் காட்சிப்படும் ஆப் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது. மாறாக நீங்கள் அதை திறக்கும்போது புதிய பெயர் தோன்றும். "பேஸ்புக்கின் ஒரு பகுதியாக இருக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆனது மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்" என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரையிலாக புதிய பெயர்களை பற்றிய வார்த்தைகள் எதுவும் இல்லை. 


பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்மற்றும் புகைப்படம், வீடியோ பகிர்விற்கான வலைப்பின்னலான இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு ஆப்ஸ்களின் பெயர்கள் ஆனது கூடிய விரைவில் மாற்றப்படவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 06-08-2019, 05:44 PM



Users browsing this thread: 62 Guest(s)