06-08-2019, 05:39 PM
நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்
பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் உயர்ந்து நிற்கிறது இந்த ’நேர்கொண்ட பார்வை’.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்துக்கு எதிராக 2016-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் பிங்க். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை.
இதில் ஒரிஜினல் கதையை அப்படியே எடுத்துக் கொண்டு அதில் அஜித்தின் கதாபாத்திர வடிவமைப்பை மட்டும் கொஞ்சம் மாற்றி உருவாக்கியிருக்கிறார்கள்.
பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஏற்று நடித்த வழக்கறிஞர் வேடத்தில் தமிழில் அஜித் குமார் நடித்துள்ளார். பிங்க் படத்தை இந்தியா முழுக்க கொண்டாட அமிதாப் பச்சனின் அசாத்திய நடிப்பும் ஒரு முக்கிய காரணம். அமிதாப் நடிப்புடன் ஒப்பிடாமல் பார்த்தால் இதில் அஜித்தின் நடிப்பும் ரசிக்கும்படியே அமைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்புக்கு தீனி போடும் ஒரு கதாபாத்திரத்தில் அஜித்தை பார்ப்பது நிச்சயம் அவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
குறிப்பாக அவர் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆக்ஷன் காட்சிகளும் பிளாஷ்பேக் காட்சிகளும் அவர் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.
படத்தில் அஜித்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்வது யுவனின் பின்னணி இசை. குறிப்பாக அஜித் – யுவன் கூட்டணியில் எப்போதுமே ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கும் என்பதை இந்தப் படம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிருபித்துள்ளது.
அஜித்தை விட படத்தில் அதிகம் இடம்பெறுவது ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா டரியங் ஆகியோர்தான். படம் முழுக்க சோகமாகவே இருக்கவேண்டும் என்ற வரையரைக்குள் இயல்பு மீறாத நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார்கள்.
அதேபோல் இரண்டாம் பாதியில் அறிமுகமானாலும் அதன்பின் இறுதிகாட்சி வரை அஜித்துடன் போட்டி போட்டு நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நெறியாளர் ரங்கராஜ் பாண்டே நடித்திருக்கிறார். முதல் படம் என்ற பிம்பமே இல்லாமல் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் அதுவே கொஞ்சம் எல்லை மீறுவதுபோலவும் தோன்றுகிறது.
வெகுசில படங்கள்தான் எதிர்ப்பாளர்களேயின்றி எல்லோராலும் ஏற்றுகொள்ளப்படும். அப்படி ஒட்டுமொத்த திரை ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடி தீர்க்கப்பட்ட ஒரு படம் பிங்க். அதன் ஜீவனை கொஞ்சமும் சிதைக்காமல் தமிழாக்கம் செய்த விதத்திலேயே இயக்குநர் ஹெச். வினோத் பாதி வெற்றியை பெற்றுவிட்டார். இதில் அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற கூடுதல் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த விதத்தில் முழு வெற்றியையும் ருசித்துவிட்டார்.
மொத்தத்தில், பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் உயர்ந்து நிற்கிறது இந்த ’நேர்கொண்ட பார்வை’.
செய்தியாளர் : ராகேஷ் பிரபாகர்

first 5 lakhs viewed thread tamil