06-08-2019, 11:23 AM
போலீஸ் பெயரில் திருச்சி என்.ஐ.டி மாணவியை ரேப்பிங் செய்த திருடன்!
திருச்சி துவாக்குடியில் என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கே இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்த விடுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மத்திய அரசு ஊழியரான அம்மாணவியின் தந்தை சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தந்தையை சந்திக்க அடிக்கடி செல்லும்போது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் அடிக்கடி வெளியே சென்று வருவது வழக்கம்.
இதே போன்று கடந்த 1-ம் தேதி விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியே சென்ற மாணவி 2 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திருச்சி திரும்பிய அவர், தனது காதலருடன் கல்லூரி முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, அங்கு வந்த வாளவந்தான் கோட்டையை சேர்ந்த மணிகண்டன் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்தி, இருவரையும் யார் என விசாரித்ததுடன், இரவில் இங்கு நின்றுகொண்டிருப்பது ஏன் என போலீஸ் பாணியில் மிரட்டியிருக்கிறார்.
வெளியூர் சென்றுவிட்டு வந்ததாகவும், விடுதியில் விடுவதற்காக வந்த நண்பருடன் பேசிக்கொண்டி ருப்பதாகவும் மாணவி கூறியுள்ளார். இருட்டில் இங்கு நிற்பது ஆபத்தானது எனக் கூறிய மணிகண்டன், கல்லூரி விடுதியில் கொண்டு விடுவதாக மாணவியை அழைத்துள்ளார்.
அதற்கு மாணவி மற்றும் அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததுடன், தானே சென்று விடுவதாக மாணவி கூறியுள்ளார். இதை ஏற்காத மணிகண்டன், காதலரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, மாணவியை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு கல்லூரியின் நுழைவாயில் வழியே விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லூரி வளாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மாணவியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மணிகண்டன்.
பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி மொபைல் மூலம் காதலர் மற்றும் சக மாணவிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாணவியின் தந்தைக்கும் தகவல் கொடுத்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். காதலன் துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மாணவி மற்றும் அவரது காதலர் கூறிய அடையாளங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாளவந்தான் கோட்டை மணிகண்டனை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.
மணிகண்டன் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கியிருக்கான். . இவன் என்.ஐ.டி கல்லூரி விடுதி வழியே வாழவந்தான்கோட்டையில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். அவன் கஞ்சாவும் இந்த கல்லூரிக்குள் விற்பது வழக்கமாக வைத்திருக்கிறான். இதில் பல மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இவனுக்கு கஸ்டமராக இருந்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கஞ்சா வாங்கிய பழக்கம் இவன் உள்ளே சென்று வருவது அங்க இருக்கும் வாட்ச்மேன்களுக்கும் தெரியுமாம்.
கல்லூரிக்குள் விற்கப்படும் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடுக்காத வரை இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்பது மட்டும் உண்மை
first 5 lakhs viewed thread tamil