Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் எல்லாம் முடிந்து மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. அப்போது பிக் பாஸ் திடீரென நடிகர் சரவணனைக் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுவதாகக் கூறினார்.
முன்தின நாள்தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். அதனால், இனிமேல் யாராவது வெளியேற்றப்பட வேண்டுமானால், அடுத்த வாரம்தான் வெளியேற்றப்படுவார்கள் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதனால், பிக் பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் எல்லாம் முடிந்து மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான், பிக் பாஸ் திடீரென நடிகர் சரவணனனை கன்ஃபெஷன் அறைக்கு வரச் சொன்னார். அங்கே சரவணனிடம், அவர் சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில், கல்லூரி படிக்கிற நாட்களில் பேருந்தில் பெண்களை உரசியது தொடர்பாக கூறியதைப் பற்றி குறிப்பிட்டு இந்த காரணத்துக்காக நீங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கூறினார். இதையடுத்து சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸின் இந்த திடீர் முடிவு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், சிலர் பேருந்துகளில் பெண்களை உரசுவதற்காகவே செல்கின்றனர் என்று கூறினார். அப்போது, சரவணன் தானும் கல்லூரி படிக்கும்போது அப்படி செய்திருப்பதாகக் கூறினார். அந்த நேரத்தில், கமல்ஹாசன் அதையும் தாண்டி நீங்கள் புனிதமாகிவிட்டீர்கள் என்று கம்மெண்ட் செய்து கடந்துவிட்டார். ஆனால், சரவணன் கூறியது பற்றி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சை எழுந்தது. பல லட்சம் பேர் பார்க்கிற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் கடந்த காலங்களில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதை கூறுவது மிக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சரவணனும் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து அதற்காக மன்னிப்பும் கேட்டார். ஆனாலும், அந்த பிரச்னை தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. இந்த நிலையில்தான் பிக்பாஸ் நடிகர் சரவணனன் கல்லூரி படித்த காலத்தில் பேருந்துகளில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதைக் கூறியதைக் குறிப்பிட்டு இந்த காரணத்துக்காக உங்களை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுவதாகக் கூறினார். பிக் பாஸின் தாமதமான நடவடிக்கை என்றாலும் இது குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒருவர் செய்த தவறுக்கு பல ஆண்டுகள் கழித்து அவரே எதிர்பாராமல் தண்டனை கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு சித்தப்பாவாக நடித்ததிலிருந்து சரவணனனை பலரும் சித்தப்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர். அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் சித்தப்பு என்று அழைக்கப்பட்டார். தற்போது அவர், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது போட்டியாளர்களிடையேயும் பார்வையாலர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 06-08-2019, 11:17 AM



Users browsing this thread: 13 Guest(s)