07-01-2019, 09:49 AM
செங்குன்றம் ஏரி
மொத்தம் 11.25 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளிலும், தற்போது 1.351 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரைப் பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
கடல் நீரை குடிநீராக மாற்றும் இரண்டு திட்டங்களுக்கு, தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டது. இதற்காக ரூ.7,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்த திட்டம் இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் இருந்து ஓரளவு தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.
பொங்கல் இலவசப் பொருட்களுக்காக தமிழக அரசு ரூ.2,300 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீருக்கு எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் அலைக்கழித்து வருகிறது