07-01-2019, 09:35 AM
இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்படுவதாகவும், இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
![[Image: sc_07084.jpg]](https://image.vikatan.com/news/2019/01/07/images/sc_07084.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)