07-01-2019, 09:35 AM
``திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து!” -தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு
எனினும் தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. ஆளும் அ.தி.மு.க தனது வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. இன்று அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனத் தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், எம்.எல்.ஏ-க்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.