07-01-2019, 09:33 AM
photo credit: @bcci
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேஸல்வுட் - ஸ்டார்க் ஜோடி இந்திய பௌலர்களைச் சிறிது நேரம் சோதித்தனர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சில் நிதானமாக எதிர்கொண்டனர். இந்தக் கூட்டணி கடைசி விக்கெட்டுக்கு 40 ரன்கள் மேல் குவித்தது. இருப்பினும் இவர்களை குல்தீப் யாதவ் பிரித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்றது ஆஸ்திரேலியா. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் குல்தீப் யாதவ்.இதற்கிடையே, பாலோ ஆன் பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் மீண்டும் தடைபட்டது. இதனால் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பு இன்றி 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தது.