Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கோமாளி படத்தில் ரஜினியை விமர்சித்த காட்சிகள் நீக்கப்படும் - தயாரிப்பாளர்



[Image: rajini.jpg]ஐசரி கணேஷ் | ரஜினிகாந்த்

[Image: sficon.gif][Image: sticon.gif]
news18 
Updated: August 5, 2019, 1:08 PM IST

கோமாளி படத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்த காட்சி நீக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார்.

அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் . மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில், அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.

ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “நானும் ரஜினி ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வருவதை நானும் ரசிகர்களைப் போல் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரஜினியின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன். கோமாளி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என்று கூறினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 05-08-2019, 05:22 PM



Users browsing this thread: 2 Guest(s)