screw driver ஸ்டோரீஸ்
அடுத்த நாளும் சிந்தாதிரிப்பேட்டையில் அலைய நினைத்திருந்த அந்த எண்ணத்தை.. அவநம்பிக்கையுடன் அசோக் கைகழுவினான்..!! ஆனால்.. அவன் மனதில் எப்போதும் எழுந்து.. அவனைப்பார்த்து கைகொட்டி நகைக்கிற மீராவின் நினைவுகளை கலைந்திடத்தான்.. அவனுக்கு வழியேதும் புலப்படவில்லை..!! அலுவலகச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அவளது கவிதைக்காகிதம்.. அவர்கள் அமர்ந்து உண்டு கதையடிக்கிற அந்த ஃபுட்கோர்ட் மேஜை.. சிவந்த மூக்குடன் சிரிக்கிற குரங்கு பொம்மை.. மஞ்சள் இதழ்களுடன் மலர்ந்து குலுங்கும் ரோஜாத்தோட்டம்.. அர்த்தம் புரியாத பார்வையுடன் அவனையே வெறிக்கிற அவளது வால்பேப்பர்.. அவளது அழைப்புக்கென பிரத்தியேகமாக செலக்ட் செய்து, செட் செய்து வைத்திருந்த செல்ஃபோன் ரிங்டோன்..!! கண்ணில் படுகிற அனைத்துமே.. காயம்பட்ட அவன் நெஞ்சில் திராவகம் தெளிப்பதாகவே இருந்தன..!!

மனதில் இருந்த குழப்பமும், பயமும், வேதனையும்.. அசோக்கின் முகத்திலும் வெளிப்படாமல் இல்லை.. வீட்டிலிருப்பவர்கள் அவனுடைய நடவடிக்கைகளை வித்தியாசமாக பார்த்தனர்.. எனினும் அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.. ஏதாவது கேட்டாலும் இவன் 'ஒன்றுமில்லை' என்றே கூறி சமாளித்தான்..!!

"போதும் மம்மி.. எனக்கு பசி இல்ல..!!"

பெயருக்கு கொறித்துவிட்டு அசோக் எழ முயல.. பாரதி பொறுமை இழந்து போனாள்.. மகனின் முகத்தை ஏறிட்டு கடுமையாக ஒரு முறை முறைத்தாள்.. அவனது கண்களை நேருக்கு நேராக எதிர்கொண்ட கூரான பார்வை.. அந்தப்பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்.. எழுந்தாய் என்றால் எரித்துவிடுவேன் என்பது மாதிரி..!! பாரதியின் அனல்கக்கும் பார்வை ஒன்றே அசோக்கிற்கு போதுமானதாக இருந்தது.. எழ முயன்றவன், பிறகு தயக்கத்துடன் மீண்டும் அமர்ந்தான்.. தட்டை அருகில் இழுத்து, சாதத்தை கொஞ்சமாய் அள்ளி, மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்..!!

மகன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும், பாரதியின் கோபமும் மறைந்து போனது.. உள்ளத்தில் அவன் மீதான அன்பு, உடனடியாய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.. அதேநேரம் 'இவனுக்கு ஏதோ பிரச்னையோ' என்கிற கவலையும் அவளை ஆட்கொண்டது.. சாதம் மெள்ளுகிற மகனின் கேசத்தை, இதமாய் வருடிக்கொடுத்தாள்..!!

"அவ கூட ஏதாவது சண்டையா..??" பாரதியின் கேள்வி கூர்மையாக இருந்தது.

"ச..சண்டையா.. அ..அதுலாம் இல்லையே..??" அசோக்கிடம் ஒரு தடுமாற்றம்.

"அப்புறம் என்னாச்சு..??"

"எ..என்னாச்சுனா..??"

"ப்ச்.. நடிக்காத அசோக்.. நானும் ஒருவாரமா பாத்துட்டுத்தான் இருக்கேன்.. நீ ஒன்னும் சரியில்ல..!! உன் மூஞ்சில ஒரு களையே இல்ல.. எந்தநேரமும் எதையாவது யோசிச்சுட்டே இருக்குற..?? ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. வீடே தங்குறது இல்ல..!! எ..என்னாச்சு உனக்கு.. ம்ம்..?? சொல்லு.. மீரா கூட எதும் பிரச்சினையா..??"

"இ..இல்ல மம்மி.. அதுலாம் ஒன்னும் இல்ல..!!"

"அப்புறம்..??"

"ஆபீஸ் டென்ஷன்தான்..!! கொஞ்சநாளா ரொம்ப ஹெக்டிகா போயிட்டு இருக்கு..!!" அசோக் கம்மலான குரலில் சொல்ல, பாரதி அவனை ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பிறகு, 

"வேற ஒன்னும் இல்லையே..??" என்றாள் முழு நம்பிக்கை இல்லாதவளாகவே.

"அதான் சொல்றன்ல..??"

"ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! ஆபீஸ் டென்ஷன்லாம் ஆபீஸ்லயே விட்டுட்டு வர மாட்டியா.. வீட்டுக்கு வந்தும் அதையே நெனச்சுட்டு இருப்பியா.. என்ன புள்ள நீ..??" பாரதியின் குரலில் ஒருவித பொறுமல்.

".................."

"ஆன்னா ஊன்னா சாப்பாடு மேல கோவத்தை காட்ட வேண்டியது..!!"

".................."

"அவதான் வந்து உன்னை அடிச்சு திருத்தணும்..!!"

அப்படி சொல்லும்போதே, பாரதிக்கு திடீரென மீராவின் நினைவுகள்..!! ஒரே ஒரு நாள்தான் சந்தித்து பேசியிருந்தாலும்.. மீராவுடன் ஒரு அன்னியோன்ய உணர்வு அவளுக்கு அன்றே வந்திருந்தது..!! 'தனக்குப்பிறகு தனது இடத்தில் இருந்து.. தன் மகனை அன்புடன் கவனித்துக் கொள்ளப்போகிற ஒரு ஜீவன்.. தான் ஈன்றெடுத்தவனுடன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு, அவனை முழுமனிதனாக்கப் போகிற ஒரு உயிர்..' என்பது மாதிரியான எண்ணத்தில் பிறந்த உணர்வு அது.. மகனை உண்மையாக நேசிக்கிற எந்த தாய்க்குமே, அவனுடைய மனைவியை பார்த்து வரவேண்டிய உன்னதமான உணர்வு..!!

குரலில் உடனடியாய் ஒரு மென்மையை வரவழைத்துக்கொண்டு.. ஒருவித ஏக்கம் தொனிக்க.. அசோக்கிடம் பாரதி கேட்டாள்..!!

"இ..இந்த வாரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா அசோக்..??"

அம்மா அப்படி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. மனதில் சுருக்கென்று ஒரு வலியுடன், அம்மாவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான்..!! மகனின் முகத்தை கவனியாத பாரதி.. எங்கேயோ பார்த்துக்கொண்டு தொடர்ந்து பேசினாள்..!!

"ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! பார்த்து ஒருவாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ளயே வருஷக்கணக்கான மாதிரி இருக்குது..!!"

".................."

"அவகிட்ட பேசிட்டு இருந்தா, நேரம் போறதே தெரியல தெரியுமா..?? ரொம்ப நல்ல பொண்ணுடா..!! நீதான் கோவக்காரி, டெரர் பார்ட்டின்னு என்னன்னவோ சொன்ன..!!"

".................."

"பாக்கணும் போல இருக்குடா.. கூட்டிட்டு வர்றியா..??"

ஏக்கத்துடன் கேட்டுவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கிற அம்மாவுக்கு, என்ன பதில் சொல்வதென்று அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவனுடைய கண்களில்..!! அதனை அடக்கிக்கொண்டு..

"ம்ம்.. கூ..கூட்டிட்டு வர்றேன்..!!" சற்றே பிசிறடிக்கிற குரலில் சொன்னான்..!!

பாரதி மட்டுமல்ல.. அசோக்கின் குடும்பத்தார் அனைவருமே.. அவர்களையும் அறியாமல், அசோக்கின் நிலையையும் அறியாமல்.. மீராவின் நினைவுகளை அவனுக்குள் தூண்டிக்கொண்டே இருந்தனர்..!! ஏற்கனவே நொறுங்கிப்போயிருந்த அசோக்கிற்கு.. அவர்களின் நடவடிக்கைகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன..!!

"ஸ்பென்ஸர் போயிருந்தேண்டா.. இயர் ரிங் வாங்கினேன்.. நல்லாருந்துச்சேன்னு அண்ணிக்கும் ஒரு செட் வாங்கினேன்.. இந்தா.. அவங்களை பாத்தா குடுத்துடு..!!"

அண்ணனின் கையில் காதணி பெட்டகத்தை திணித்துவிட்டு.. திரும்பி நடந்தாள் சங்கீதா..!! வலிக்கிற மனதுடனே அசோக் அந்த பெட்டகத்தை பார்க்க.. வாசலை அடைந்திருந்த சங்கீதா திரும்பி கேலியாக சொன்னாள்..!!

"மவனே.. நான் வாங்கி தந்ததா சொல்லி குடுக்கணும்..!! நீயே வாங்கினதா பீலா வுட்டு.. முத்தம் கித்தம் கேட்டு எங்க அண்ணியை டிஸ்டர்ப் பண்ணினேன்னு தெரிஞ்சது.. கொன்னுடுவேன்..!! ஹாஹாஹா..!!"

மத்தாப்பு கொளுத்திய மாதிரி சிரித்துவிட்டு.. மறைமுகமாக அண்ணனுக்கு ரொமான்ஸ் ஐடியாவும் வழங்கிவிட்டு.. அறையை விட்டு வெளியேறினாள் சங்கீதா..!! அசோக்குக்குத்தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. வேதனை கொப்பளிக்கிற நெஞ்சுடன்.. வெகுநேரம் அந்த காதணியையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!

"ஹ்ம்ம்... என் அருமை, என் புள்ளைக்குத்தான் தெரியல.. அட்லீஸ்ட் வரப்போற மருமகளாவது தெரிஞ்சுக்கட்டும்..!! என்னோட நாவல் எதுவும் மீரா படிச்சது இல்லன்னு சொன்னா.. இது நான் எழுதினதுல ரீசன்ட் ஹிட்.. இதை அவகிட்ட குடுத்து படிக்க சொல்லு... மாமனாரோட மகிமை என்னன்னு அவ தெரிஞ்சுக்குவா..!! ஹாஹா..!!"

மணிபாரதி தன் பங்குக்கு அசோக்கின் உணர்வை சீண்டினார்..!! அவர் வைத்துவிட்டு சென்ற நாவலின் தலைப்பை பார்த்த அசோக்கிற்கு.. அழுகை மேலும் பீறிடவே செய்தது..!!

"எங்கே அந்த வெண்ணிலா..??"

நாராயணசாமியும் அமைதியாய் இருக்கவில்லை.. அனுபவத்தால் தான் கற்ற காதல் பாடங்களை, அறிவுரைகளாக பேரனுக்கு அவ்வப்போது அள்ளி வீசிக்கொண்டிருந்தார்..!!

"சும்மா உம்முனே இருக்காத.. நானும் லவ் பண்றேன்னு ஏதோ பேருக்கு லவ் பண்ணாத..!! அவளை சிரிக்க வை.. அழ வை.. கோவப்பட வை.. வெக்கப்பட வை..!! அவளை அடி.. அவளுக்கு முத்தம் குடு..!! என்னை மாதிரி நீ கெழட்டுப்பயலானப்புறமும் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற மாதிரி.. ஏதாவது பண்ணிக்கிட்டே இரு..!! எந்த லட்சணத்துல நீ லவ் பண்ணினன்னு.. எழுபது வயசுல பெருமையா சொல்லிக்கிற மாதிரி உன் லவ் இருக்கணும்..!! புரியுதா..??"

"ம்ம்.. புரியுது தாத்தா..!!" மனதில் எழுந்த ஆதங்கத்தையும் சோகத்தையும் மறைத்துக்கொண்டு, அமைதியாக சொன்னான் அசோக்.

வீடே தங்குவதில்லை என்று.. அசோக்கைப் பற்றி பாரதி குறைபட்டுக்கொண்டது சரிதான்..!! வீடு தங்கவே அவன் விருப்பப்படவில்லை என்பதுதான் அதன் பின்னணியில் உறைந்திருந்த உண்மை..!! அடிக்கடி இந்த மாதிரி மீரா பற்றி பேசி.. அசோக்கின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தால்.. அவன் என்ன செய்வான் பாவம்..?? உள்ளம் கவர்ந்து சென்றவளை கண்டறியவும் வழியில்லை.. உள்ளது உள்ளபடி குடும்பத்தாரிடம் உரைக்கவும் துணிவில்லை.. உடைந்து போனான்..!! வீட்டை தவிர்த்தான்.. அலுவலக வேலை இருக்கிறதென அங்கேயே அடிக்கடி முடங்கிப் போனான்..!!

அலுவலகத்தில் மட்டும் என்ன அவனுக்கு நிம்மதியா கிட்டிவிடப் போகிறது..?? அவள்தான் நினைவை நிறைய கொடுத்துவிட்டு.. நிம்மதியை முழுதாய் எடுத்துச் சென்றுவிட்டாளே..?? அலுவலகத்தில் எப்போதும்.. புகை மண்டலத்துக்கு இடையில்தான் அவன் முகம் தேட வேண்டியிருக்கும்.. அந்த அளவுக்கு எந்த நேரமும் சிகரெட் புகைத்தான்..!! அவன் நெஞ்சில் எரிகிற நெருப்புக்கு தற்காலிக மருந்தாய்.. உதட்டில் பொருத்திய சிகரெட்டின் சிரத்தில் நெருப்பு வைத்தான்..!! நச்சுப்புகை உள்ளே சென்று அத்தனை உறுப்புகளையும் தடுமாறச்செய்ய.. அந்த தடுமாற்ற உணர்வில், தன் மனவேதனையின் வீரியம் குறைக்க முயன்றான்..!!

[Image: RA+56.jpg]

அலுவலக வேலைகளும் எதுவும் செய்வதில்லை.. அப்படியே செய்தாலும்.. யாருடனாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு சண்டை..!! புது ப்ராஜக்ட் சம்பந்தமாக பாலாஜி அட்வர்டைஸிங்குக்கு கலந்தாய்வு செய்ய சென்றவன்.. மோகன்ராஜுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 05-08-2019, 12:10 PM



Users browsing this thread: 11 Guest(s)