Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஜனவரி 14ல் வெளியாகிறது ‘தர்பார்’ - ரஜினிகாந்த் பேட்டி

[Image: 69042.jpg]
தர்பார் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

[Image: 091312_Rajinikanth.png]
படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற நிலையில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இதையடுத்து ரஜினிகாந்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. அந்த புகைப்படங்களை வைத்து டைட்டில் போஸ்டரை வடிவமைக்க ரசிகர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை வடிவமைத்து ட்விட்டரில் வெளியிட்டனர்.
[Image: 092113_Screen%20Shot%202019-08-05%20at%2...5%20AM.png]
இந்நிலையில், மும்பையில் தர்பார் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தர்பார் திரைப்படம் சிறப்பாக தயாராகி வருவதாக தெரிவித்தார். ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் தனது ரசிகர்கள் நீர்நிலைகளைத் தூர்வாருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 05-08-2019, 11:44 AM



Users browsing this thread: 9 Guest(s)