Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F7c34a612-c910-4b7e-a...2Ccompress]
ஸ்ரீராம் வெங்கட்ராமன்
[/color]
[color=var(--content-color)]காரின் உரிமையாளரான அந்தப் பெண் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கால தாமதம் செய்துள்ளனர். இதன்பிறகு விவகாரம் பெரிதாகவே ஸ்ரீராம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீராம். இதற்கிடையே, விபத்து குறித்த செய்திகள் வெளியானதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராமை வசைபாடத் தொடங்கினர் மக்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கண்டனங்கள், விமர்சனங்கள் அதிகமாகப் பகிரப்பட்டன
[color=var(--content-color)]சமூகப் பணிகள் செய்ய வேண்டிய ஒரு ஐ.ஏஸ் அதிகாரியே குடிபோதையில் வாகனத்தை ஒட்டி  விபத்து ஏற்படுத்தலாமா என்றெல்லாம் கண்டனங்கள் குவிந்தன. மக்களின் இந்த எதிர்ப்புக்கு அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதைத் தாண்டி மற்ற காரணங்களும் இருக்கின்றன. கொச்சியில் பிறந்த ஸ்ரீராம் ஒரு மருத்துவர். மருத்துவராகத் தேர்ச்சி பெற்றாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ தொழிலை விடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தார். வாத்தியார் பிள்ளை (ஸ்ரீராமின் அப்பா கல்லூரி விரிவுரையாளர்) என்பதாலோ என்னவோ எந்தவித ஸ்பெஷல் கோச்சிங்கும் எடுக்காமல் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F320ad736-8137-4f35-9...2Ccompress]
ஸ்ரீராம்
[/color]
[color=var(--content-color)]இரண்டாவது முயற்சிலேயே (2013ம் ஆண்டு) இரண்டாவது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ் ஆகத் தேர்ச்சியும் பெற்றார். துடிப்பு மிக்க வாலிபரான அவர் மத்திய உணவு பாதுகாப்பு துறை பணியில் இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு இடுக்கி அருகே உள்ள தேவிகுளம் பகுதி சப்-கலெக்ட்ராக பணியமர்த்தப்பட்டார். இங்கு தான் அவருக்கு ஏறுமுகம் ஏற்பட்டது. சப்-கலெக்டராக பணியில் அமர்ந்தவுடன் இடுக்கி மலைப்பகுதியில் இருந்து விதிகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள், லேண்ட் மாஃபியாக்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.[/color]

[color=var(--content-color)]தொடர்ந்து தனது செயல்களில் அதிரடி காட்ட லோக்கல் அரசியல்வாதிகளின் பகையும் சம்பாதித்தார். இதனால் சப்-கலெக்டர் பதவி பறிபோனது. இருந்தாலும் அதன்பிறகு எந்த துறைக்கு சென்றாலும் அங்குத் தனி முத்திரை பதித்துவந்தார். அரசியல்வாதியாக இருந்தாலும், வேறுநபராக இருந்தாலும் அவர்கள் மீது தைரியமாக இவர் எடுக்கும் நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. வலைதளங்களில் அவருக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F21d48a77-77b1-4e81-9...2Ccompress]
ஸ்ரீராம்
[/color]
[color=var(--content-color)]முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் முதல் பலரும் அவரின் நடவடிக்கையைப் பாராட்டினர். இவர் பேசும் காட்சிகள் அவ்வப்போது இளைஞர்கள் மத்தியில் பரவ `ஹீரோ'வாக வலம்வரத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்ற ஸ்ரீராம் இந்தவாரம் தான் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் கேரள சர்வே துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். தனக்குக் கிடைத்த புது பதவியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் ஸ்ரீராம். இங்கு தான் அவருக்கு வினையே ஏற்பட்டது.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 05-08-2019, 11:41 AM



Users browsing this thread: 77 Guest(s)