Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி![/color]
[Image: vikatan%2F2019-08%2F059f5940-fa6f-4111-8...2Ccompress][color=var(--meta-color)]ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன்[/color]
[color=var(--content-color)]கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் கே.எம் பஷீர். மலையாள நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் பஷீர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் தன் வேலைகளை முடித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பஷீரின் வாகனம் தூக்கிவீசப்பட்டு அருகிலிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார்
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F0714ca8f-38cc-4b17-8...2Ccompress]
பஷீர்
[/color]
[color=var(--content-color)]பஷீரின் பரிதாப உயிரிழப்பு கேரளாவில் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. அதற்கு காரணம் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன். தன் சொகுசு காரை குடிபோதையில் ஸ்ரீராம் இயக்கியதே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. அவர் காரில் இருந்து இறங்கும்போது குடிபோதையில் இருந்ததை மக்களும் பார்த்துள்ளனர். இந்த விபத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட பஷீரின் குடும்பம் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆனால் பஷீரின் உயிரிழப்பைக் கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் ஸ்ரீராமை காப்பாற்ற முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளதாகக் கூறுகிறது மலையாள ஊடகங்கள்.[/color]
[color=var(--content-color)]விபத்து நடந்த சிறிது நேரம் கழித்து ஸ்ரீராமை விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் தான் காரை ஓட்டவில்லை எனக் கூறிய அவர் பிறகே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு மது அருந்தியதற்கான ரத்தப் பரிசோதனை செய்வதில் போலீஸார் தாமதம் காட்டியுள்ளனர். விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, விபத்து நடந்த போது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரது நண்பருமான பெண் ஒருவரும் இருந்துள்ளனர்[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 05-08-2019, 11:39 AM



Users browsing this thread: 85 Guest(s)