Fantasy காதல்..காமம்...கதையும் காட்சியும்...!
#27
காமக்கதைகளை நான் கடந்த 40 வருடங்களாக படித்து வருகிறேன்...
எல்லாக்கதைகளும் ஒரே மாதிரி தான்..
சொல்லப்பட வேண்டிய விஷயங்களை விட விஷமங்கள் தான் அதிகம்.

அறிந்து கொள்ள வேண்டிய கதைகளை விட மறந்து கடந்து போக வேண்டிய கதைகள் தான் எல்லாமுமே.
ஏனென்றால் சில நிஜக்கதைகளைத்தவிர ஏறக்குறைய எல்லாமே கற்பனைக்கதைகள் தான்.

சிந்தனை என்பது ஒரு அரிய கல்வி. எந்நேரமும் கலவி பற்றியே யோசிக்க வைத்துவிடும் கல்வியா நமக்கு வேண்டும். அப்படி பாழ்பட்டுப்போன மனதோடு நாம் வாழ்கின்ற நாட்கள் எல்லாமே வீண்.

நமக்காக நாம் வாழ்வதா வாழ்க்கை,
எல்லோருக்காகவும் வாழ்வதே வாழ்க்கை.

வாழ்க்கையில் முன்பகுதி விளையாட்டும் வேடிக்கையும் விஷமங்களும் தான்.
ஆனால், பிற்பகுதி.......
அலைக்கழித்தலும் ஆறுதல்தேடலும் அமைதியடைவதும் தான்.

இதை புரிந்து தெளியாத நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே ஒரு 'அந்நியனை' வைத்துக்குக்கொண்டு அல்லாடுகிறோம்.

அழகுணர்ச்சி என்பது இயற்கையில் நாம் அடைந்தது. அழகை ரசிப்பது நல்ல பொழுதுபோக்கு, கால நேரமில்லாமல் எப்போதுமே அது தொடரலாம். அது ஒரு நல்ல ஆரோக்கியமான கேளிக்கை.

ஆனால் அழகை அடைவதும் புணர்வதும் எல்லை மீறினால் விபரீதம், வருத்தம்...இன்னும் வேதனை சோதனை நரகம்.

சொர்க்கத்தை தேடி நம் பயணம் இருக்க அழகை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வோம்.

அதற்காக காம உணர்ச்சியே கூடாது என்று சொல்லவில்லை, அதை கட்டுக்குள் வைக்க வேண்டும், கர்ணன் காண்டீபத்தை உபயோகித்தது போல எப்போது தேவையோ அப்போது மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும்.

வயதுக்கு மீறிய வளர்ச்சி எல்லோரிடமும் பிஞ்சிலேயே பழுத்துப்போன பலதுகள்
கல்யாணம் ஆகி பிள்ளை பெறத்தகுதியை இழந்து விடுவதேன்.

நம் உணவில் ஹெமிக்கல் அதிகம் ஒரு புறம், வீரியத்தையும் விஷயமறியாமல் விரயமாக்குவதும் ஒரு முக்கிய காரணம்.

இன்று நடைமுறை வாழ்க்கையில் 'சேட்டை'களை குறைத்துக்கொண்டு அடக்க ஒடுக்கமாய் இருக்கும் ஆண்கள் எல்லோருமே கல்யாணத்திற்குப்பின் தான்.
அவர்களிடம் கேளுங்கள், இந்த ஆடி அடங்கும் வாழ்க்கையைப்பற்றி.

காமம் ஒரு உடற்கூறு புணர்ச்சி விதி.
வாழ்க்கை முழுவதும் காம உணர்ச்சி இருந்தால் தான் அலுப்பில்லாமல் சலிப்பில்லாமல் ஏதோ ஒரு நோக்கத்திற்காக விரும்பி வாழ முடியும்.

'வாலிபமே வா வா' (பாரதிராஜா+கார்த்திக்+ராதா) படத்தில் அலெக்ஸ் ஒரு கேரக்டர். நல்ல மல்யுத்த வீரன். அவனை வீழ்த்த அவனுடைய எதிரி அவனது காதலிக்கு பணம் கொடுத்து படுக்கையறையில் நீ வீரியமற்றவன் என்று சொல்ல சொன்னதும் அது ஒரு மன வியாதியை உருவாக்கி விடும். அதன் பின் அவன் எல்லாவற்றிலும் தோற்றுப்போவான், படுக்கை முதல்.

நான் ஆண்மை மிக்கவன் வலியவன் வீரன் சாதுர்யன் என்று நம்மை நாமே நினைத்துக்கொள்ளும் 'சக்தி' வீணாகாமல் விரயமாகாமல் 'காலத்தில் பயிர் செய்ய கற்றுக்கொள்வோம்.

எம்ஜிஆர் அவர்களுக்கு ஏன் வாரிசு இல்லாமல் போனது?
கமலுக்கு முற்பகுதி வாழ்க்கை ஏன் கேள்விக்குறியானது?
இன்றும் எத்தனை கர்ப்பங்கள் செயற்கை வழியில் தறிக்கின்றன?
Like Reply


Messages In This Thread
RE: காதல்..காமம்...கதையும் காட்சியும்...! - by wealthbell - 03-08-2019, 12:20 PM



Users browsing this thread: 2 Guest(s)