02-08-2019, 08:37 PM
அவன் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தான்...மெதுவாக சமையலறையருகே சென்று அவளை நோட்டமிட்டான்...கண்கள் பனிக்க கைகளால் துடைத்தபடி அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே சமையலில் ஈடுபட்டிருந்தாள் அந்த அவள் - மையல்.
அருகில் சென்று லேசாக கனைத்தான்...
"என்ன கோபமா...?"
".............."
"ம்..என்ன பதிலே காணோம்?"
அவள் மௌனம் அவனை வெறுப்பேற்றியது.
"ஏன்..பதில் சொல்ல மாட்டேங்கிற?"
"என்ன பதில் சொல்ல சொல்றீங்க?"
"ஏதாவது சொல்லேன்."
"என் கோபம் யாரை என்ன பண்ணிடும்?"
"எதுக்கு கோபம்'ன்னேன். நான் சொன்னது விளங்கலையா?"
"விளங்கி அஞ்சாறு ஆச்சு.போங்க உங்க வேலைய பாத்துக்கிட்டு."
".................."
"எங்களுக்கும் தெரியும்..யாரு எங்க போறாங்க..என்ன பண்றாங்கன்னு."
அவள் பேச்சு அவனை சாடியது.
அவன் புரியாதது போல் முறுவலித்தான்.
"நீங்க ஆம்பளை. ஆயிரம் வழியிருக்கு. எனக்கு அப்படியா?"
அவளின் கேள்வியில் ஞாயம் இருந்தது.
"நான் என்ன சொல்ல வர்றேன்னா..."
அவனை இடைமறித்தாள்.
"ஒரு பார்வை..ஒரு வார்த்தை... பொம்பளைங்களுக்கு விளங்கிடும்...நீங்க ஒண்ணும் கிளாஸ் எடுக்காம உங்க வேலைய பாத்துட்டு போங்க."
அவள் தெளிவாக அவனை இட்டுக்கட்டினாள்.
அவன் பதிலேதும் பேசமுடியவில்லை. அதே நேரம் அவன் மொபைல் அவனோட அவளிடமிருந்து...நகர்ந்தான்...நழுவினான் என்றே சொல்லலாம்...
எந்த மொபைல் யார் அழைப்பது இவளுக்கும் ஓரளவு தெரியும்...திடீரென சிரித்துப்பேசுவதும் சிணுங்குவதும் சில நாட்களாக வாடிக்கையாகிப்போகவே
புரிந்து கொண்டாள்...என்னமோ ஏதோ...என.