Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சித்தியுடன் தகாத உறவு... நேரில் பார்த்த உடன் பிறந்த தங்கையையும் மிரட்டி உல்லாசம்... தம்பியை கொன்ற கொடுமை!!
[Image: desktop69-jpg_710x400xt.jpg]
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் - பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவக்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காப்புக்காடு பாறையில் சடலமாக மீட்கப்பட்டார்.  
காப்புக்காட்டில் சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்தனர். சிறுவனின் சடலம் கிடந்த இடத்தில் இருந்து சுமார் நான்கரை கிலோ மீட்டர் ஓடிச்சென்ற நாய் சிவக்குமாரின் வீட்டருகே படுத்துக் கொண்டது.
சிறுவன் வீட்டில் இருந்து சென்றுள்ளான் என்பதால் நாய் அங்கு சென்று படுத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் சிறுவனின் குடும்பமே போலீசிடம் சிக்கி உள்ளது. 
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் அருவருக்கத்தக்க பல கேவலமான தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறுவனின் தந்தை வெளி நாட்டிற்கு சென்று விட்டதால், தாய் பராசக்தியின் நடத்தை சரியில்லை என்று கூறப்படுகிறது.
இதனை சிலமுறை நேரில் பார்த்த மூத்த மகன் சரத்குமாருக்கு, அவனது சித்தியுடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் பழக்கத்தை பார்த்து விட்டதால் உடன் பிறந்த அக்காவையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் சரத்குமார்.
வெளியில் சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்ற சரத்குமாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அண்மையில் ஒரு நாள் சரத்குமார் தனது தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை சிவக்குமார் பார்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதை எங்கே அவன் ஊராரிடம் சொல்லி விடுவானோ என்று பயந்து அவனை கொலை செய்ய பிளான் போட்டுள்ளான் சரத்குமார். சம்பவத்தன்று தனது சித்தியிடம் தகாத உறவு விவகாரம் தம்பி சிவக்குமாருக்கு தெரிந்துவிட்டதால், அவனை கொன்றுவிட வேண்டும் என்று தனது சித்தியை துணைக்கு அழைத்துள்ளான் சரத்குமார்.
[Image: 51482-nqwfhrkdbz-1487139965-jpg.jpg]
அதே சமயத்தில் அவனது தங்கையையும் துணைக்கு அழைத்துக் கொண்டு 3 பேரும் சேர்ந்து சிவக்குமாரிடம் உடும்பு பிடிக்கலாம் என்று ஏமாற்றி, கொலை செய்யும் நோக்கில் காப்புக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து உடும்பு ஓடுவதாக கூறி, அதனை பிடிப்பதற்காக பாறை இடுக்கில் உற்று நோக்கவைத்த சரத்குமார், தான் கையுடன் எடுத்துச் சென்றிருந்த கரும்பு வெட்டும் கொடுவாளால் சிவகுமாரின் தலையை பிடித்து அறுத்துள்ளான். அப்போது உஷாராகி தப்பித்து ஓட முயன்ற சிவக்குமாரை, அவனது சித்தியும், தங்கையும் சேர்ந்து கால்களை பிடித்துக் கொள்ள, கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார் .
கொலை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஊருக்குள் வந்து தம்பியை தேடுவது போல பாசாங்கு காட்டி நடித்த சரத்குமார், ஊருக்கு வெளியே காப்புக்காட்டு பகுதிக்கு சென்று தம்பியின் சடலத்தை கண்டுபிடித்ததாக கூறியதால், அவன் மீது சந்தேகம் ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
தனது சித்தியையும், தங்கையையும் முறை தவறிய இச்சைக்கு பயன்படுத்தியதோடு, உடன் பிறந்த தம்பியையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி கொலை செய்தது அந்த  பெண்களிடம் நடத்திய விசாரணையில் தெரிகிறது. சரத்குமார், அவனது சித்தி, தங்கை ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு பயன்படுத்திய கரும்பு வெட்டும் கொடுவாளை பறிமுதல் செய்தனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 02-08-2019, 05:31 PM



Users browsing this thread: 88 Guest(s)