Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சக்களத்தி சண்டையால் நாறிய பிக் பாஸ் வீடு.. முக்கோண காதலில் உச்சகட்ட டிராமா.. வெறுப்பில் ஹவுஸ்மேட்ஸ்

சென்னை: கவின், சாக்‌ஷி மற்றும் லாஸ்லியா, இந்த மூவரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றால் ஒழிய இந்தக் காதல் பிரச்சினை இப்போதைக்கு தீராது போல.
சாக்‌ஷி, லாஸ்லியா சண்டையை சக்களத்தி சண்டை என்று தான் நெட்டிசன்களே கலாய்க்கின்றனர். அந்தளவுக்கு கவினை காரணமாகக் கொண்டு இரண்டு பேரும் அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சினை கடந்த சில வாரங்களுக்கு முன்பே உருவானது தான். இதில் மூன்று பேருக்குமே சம்பந்தம் இருக்கிறது. ஆனால் மூன்று பேருமே தங்களது தவறை உணராமல், மற்றவர்கள் மீது தவறு சொல்வது தான் இத்தனைப் பிரச்சினைகளுக்குமே காரணம்.
நேற்றும் வழக்கம் போல், மொட்டைக் கடுதாசி டாஸ்க்கை வாய்ப்பாகக் கொண்டு, தங்களது பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல முயற்சித்தனர் கவின், சாக்‌ஷி மற்றும் லாஸ்லியா.


[Image: bigg-boss-312ew-1564711430.jpg]



லாஸ்லியாவின் ஆட்டிடியூட்:
ஆனால், இந்தப் பிரச்சினையில் சக போட்டியாளர்களை அவர்கள் நடத்திய விதம் தான் எரிச்சலூட்டும்படி இருந்தது. அதிலும் குறிப்பாக லாஸ்லியா மற்றும் சாக்‌ஷியின் நடவடிக்கைகள். தனக்கு தேவைப் படும்போது, அனைவரையும் பேச அழைப்பது, பின் எடுத்தோம், கவிழ்த்தோம் என பேசி விட்டு, மற்றவர்களை மதிக்காமல் அங்கிருந்து செல்வது என ஓவராக ஆட்டிடியூட் காட்டினார் லாஸ்லியா.
[Image: bigg-boss-3123ew-1564711439.jpg]
 
[color][font]
கோபமூட்டிய சாக்‌ஷி:
இவர் இப்படி என்றால், சாக்‌ஷியோ வேறு மாதிரி கோபமூட்டினார். அவரது உணர்ச்சிகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் சொல்ல வருகிறார். ஆனால், எங்கே லாஸ்லியா தன்னை ஓவர் டேக் செய்து விடுவாரோ என, அவரைப் போலவே தானும் சாரி கேட்டதெல்லாம் ஓவர். இதனாலேயே ஷெரீன், ரேஷ்மா என சக போட்டியாளர்கள் எரிச்சல் அடைந்தனர்.

[Image: bigg-boss-3-1564711446.jpg][/font][/color]
 
[color][font]
குழப்பவாதி கவின்:
இவர்கள் இருவரும் தான் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்றால், இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமான கவினோ, வேறு மாதிரி பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார். அத்தைப் பெண்கள் கூட்டத்திற்கு நடுவே வளர்ந்தவர் எனக் கூறுகிறார். ஆனால் பெண்களின் மனதைப் புரியாதவர் மாதிரியே நடிக்கிறார்.
[Image: bigg-boss-322rewr-1564711420.jpg][/font][/color]
 
[color][font]

கமல் தான் தீர்வு:
நிஜமாகவே இவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு தேடுகிறார்களா இல்லை பிக் பாஸுக்கு கண்டெண்ட் கொடுக்க பிரச்சினையை ஜவ்வாக இழுக்கிறார்களா என்ற சந்தேகமே கடந்த சில நாட்களாக பிக் பாஸைப் பார்க்கும் போது தோன்றுகிறது. எப்படியும் இன்றும் இந்தப் பிரச்சினையை முடிக்க மாட்டார்கள் என்றேத் தெரிகிறது. பார்ப்போம் கமலாவது வந்து இதற்கு ஒரு தீர்வு தருகிறாரா என.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 02-08-2019, 09:33 AM



Users browsing this thread: 4 Guest(s)