02-08-2019, 09:30 AM
அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை தவறுகளா? சர்ச்சையில் ஆஷஸ் நடுவர்கள்
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2019%2Faug%2F01%2Fbrazen-umpiring-errors-marked-the-first-day-of-ashes-test-3204888.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=6c735a7e9e[/img]
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரைதான் இந்த நிலை. இன்னும், முதல் நாள் ஆட்டத்தில் சுமார் 35 ஓவர்கள் மீதமுள்ளது. இங்கிலாந்துக்கு இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இன்னிங்ஸ் முழுமையான பேட்டிங் இருக்கிறது. இப்படி இருக்கையில், நடுவர்கள் இப்படி தொடர்ந்து தவறான தீர்ப்புகளை அளித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஏராளமான தீர்ப்புகள் தவறாக வழங்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் போட்டி, பிர்மிங்காமில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் அனைவரும் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் ஆஷஸ் தொடர் மூலமாக அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து வேகங்களுக்கு கட்டுப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2019%2Faug%2F01%2Fbrazen-umpiring-errors-marked-the-first-day-of-ashes-test-3204888.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=6c735a7e9e[/img]
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அரைசதம் அடித்து 66 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
ஆனால், இந்த முதல் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரை நடுவர்கள் பல தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடுவர்களும், மோசமான தீர்ப்பும்:
- ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது முதல் பந்திலேயே கீப்பர் கேட்ச் ஆனார். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் பெரிதளவில் அவுட் கேட்காததால் நடுவரும் அவுட் வழங்கவில்லை. ஆனால், ரீபிளேவில் அது அவுட் என்பது தெரியவந்தது. இதனால், டேவிட் வார்னர் இதில் இருந்து தப்பினார்.
- இன்னிங்ஸின் 4-வது ஓவரில் பிராட் பந்தில் டேவிட் வார்னர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வார்னரும் இதற்கு ரிவியூ கேட்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால், அந்த பந்து உண்மையில் ஸ்டம்புகளை தகர்க்கவில்லை. எனினும், முதல் பந்தில் தவறான தீர்ப்பால் தப்பிய வார்னர், நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பது நீதிக்கு உகந்ததல்ல என்று கர்மாவே முடிவு செய்ததோ என்னவோ!
- 15-வது ஓவரில் கவாஜா 13 ரன்கள் எடுத்திருந்தபோது, வோக்ஸ் பந்தில் கீப்பர் கேட்ச் ஆனார். ஆனால், கவாஜா கிரீஸைவிட்டு நகரவில்லை. நடுவரும் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ரிவியூவைப் பயன்படுத்தினார். ரிவியூவில் கவாஜா அவுட் என்பது உறுதியானது. இதனால், அவுட் இல்லை என்ற நடுவர் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது.
- 34-வது ஓவரில் பிராட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எல்பிடபிள்யு முறையில் அவுட் வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித் அதற்கு ரிவியூ கேட்க, அதில் அவருக்கு வழங்கிய அவுட் தவறு என்பது உறுதியானது. இதன்மூலம், ஸ்டீவ் ஸ்மித்தும் தப்பினார், ஆஸ்திரேலியாவின் ரிவியூவும் தப்பியது.
- அதற்கு அடுத்த ஓவரிலேயே மேத்யூ வேட்டுக்கு எல்பிடபிள்யு கேட்டு இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அவுட் வழங்கவில்லை. எனினும், இங்கிலாந்து ரிவியூ கேட்டது. ரிவியூவில் மேத்யூ வேட் அவுட் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், நடுவரின் தீர்ப்பு மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.
- 40-வது ஓவரில் பேட்டின்சன் எல்பிடபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரும் ரிவியூ கேட்கவில்லை. ஆனால், ரீபிளேவில் அந்த பந்து ஸ்டம்புகளைத் தகர்க்கவில்லை என்பது தெரியவந்தது. எனவே, நடுவர்களின் இன்றைய தவறான தீர்ப்புகள் பட்டியலில் மேலும் ஒன்று இடம்பிடித்தது.
- 47-வது ஓவரில் பீட்டர் சிடிலுக்கு எல்பிடபிள்யூ வழங்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டில் உறசியது சிடிலுக்கு உறுதியாக தெரிந்ததால், எந்தவித ஆலோசனையும் இல்லாமல் உடனடியாக ரிவியூ கேட்டார். இதன்மூலம், ரிவியூவில் வெற்றியும் பெற்றார். இதன்மூலம், இதுவும் நடுவர்களின் மோசமான தீர்ப்பாக அமைந்தது.
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரைதான் இந்த நிலை. இன்னும், முதல் நாள் ஆட்டத்தில் சுமார் 35 ஓவர்கள் மீதமுள்ளது. இங்கிலாந்துக்கு இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இன்னிங்ஸ் முழுமையான பேட்டிங் இருக்கிறது. இப்படி இருக்கையில், நடுவர்கள் இப்படி தொடர்ந்து தவறான தீர்ப்புகளை அளித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு உலகக் கோப்பை தொடர் போன்றது. அதோடு அல்லாமல், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டமாகும். எனவே, இதுபோன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் நடுவர்கள் தீர்ப்பு இப்படி அமைவது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை, ஐசிசி நிச்சயம் கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவர்கள் மோசமான தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து முறையிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 1 ரிவியூவை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil