மூன்றாம் உலகம்
#8
என்றாலும் அவளின் மனதின் ஓரத்தில் ‘‘அவனுக்கு என்ன கொழுப்பு என்மேலயே கை வைக்கிறான். அழுதபடி வரட்டும்” என்று விட்டு விறுவிறு என்று நடந்து முன்னே சென்றாள்.

அருண் அவளின் பின்பு சோகமான நடந்து வந்து கொண்டிருந்தான். சிறிது துாரம் நடந்தவன் தலையை நிமிர்த்தி பார்த்தான். ராதாவைக் காணவில்லை. அருண் பயந்து போனான்.

‘‘அம்மா. அம்மா” என்று கத்தியபடி எல்லாத்திசைகளிலும் ஓடினான்.

சிறிது துாரம் நடந்த ராதா திரும்பி பின்னால் பார்த்தாள். அருணைக்காணவில்லை. தனக்கு முன்னால் யாரே மூசுவது போன்று சத்தம் கேட்கவே திரும்பியவளுக்கு பேரதிர்ச்சி!!!!

ஒரு விசித்திரமான ராதா இதுவரை காணாத மிருகம் ஒன்று அவளைப் பார்த்தா படி நின்றது. ராதா பயத்தினால் ‘‘அருண், அருண் என்று கத்தினாள். ஆனால் அவளின் வாயிலிருந்து வெறும் காத்து மட்டும் வெளி வந்தது.

அந்த மிருகம் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தது.ராதா ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள். அவ்வளவுதான்!!
அந்த மிருகம் பெரிதாக உறுமி விட்டு ராதாவை துரத்த தொடங்கியது. ராதாவும் ‘‘அருண்” என்று காடே அலறும் படி கத்திவிட்டு ஓடத்தொடங்கினாள்.

அவள் திக்கு திசைதெரியாமல் ஓடிக்கொண்டிருந்தாள். காட்டின் மரங்கள், செடிகள் அவள் ஓடும் வேகத்தில் அவளின் உடைகளை கிழிக்கத் தொடங்கின. அவளின் பாதையில் ஒரு நீர்வீழ்ச்சி குறுக்கிட்டது. அதற்கு மேல் ஓட முடியாமல் அங்கேயே நின்று விட்டாள். அவள் மிகவும்களைத்துப் போயிருந்தாள். தான் இனி காப்பாற்றப் படுவோம் என்ற நம்பிக்கையை இழந்திருந்தாள்.

அந்த மிருகம் அவளை நோக்கி முழு மூச்சுடன் பாய்ந்தது. ராதா கண்களை இறுக மூடிக்கொண்டாள். 

அப்போது..........எங்கிருந்தோ வந்த அருண் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மிருகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டு ராதாவுக்கு குறுக்கே பாய்ந்தான். அவன் பாயவும் அந்த மிருகம் அந்தக் கத்தியின் மேல் பாயவும் சரியாக இருந்தது. அருண் தாமதிக்காமல் அந்த மிருகத்தைக் கிழித்தான்.


வித்தியாசமான சத்தத்தை கேட்ட ராதா விழித்துப்பார்த்தாள். அருண் நிற்பதையும் அந்த மிருகம் கீ*ழே விழுந்து கிடப்பதையும் பார்த்த ராதா நடந்ததை புரிந்து கொண்டாள்.

‘‘அம்மா உனக்கு எதுவும் ஆகலையே”

‘‘டேய் . அருண் உனக்கு ஆயிருந்தா....ஏன்டா இப்டி பண்ண??” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்,

‘‘நீ தப்பிச்சு இருப்ப இல்லம்மா” என்றான் பாவமாக!!! 

ராதாவிற்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள். அருணும் அவளைத் தொடர்ந்தான்..
Like Reply


Messages In This Thread
RE: மூன்றாம் உலகம் - by Rukuktp - 01-08-2019, 06:21 PM



Users browsing this thread: 1 Guest(s)