மூன்றாம் உலகம்
#2
அருணும் ராதாவும் இரவு உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். ராமானுஜத்தின் ஆராய்ச்சி அறைக்கதவு திறந்தது. அருணும் ராதாவும் ஆச்சரியமாக பார்த்தார்கள். ராமானுஜம் மிகவும் மகிழ்ச்சியாக வெளியே வந்தார். அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். அவர் தான் எதையோ புதிததாக கண்டுபிடித்து விட்டாதாகவும், அதனால் உலகின் முக்கிய பிரச்சினை ஒன்று தீரப் போவதாகவும் சொல்லிக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு எதுவுமே விளங்காவிட்டாலும் நீண்ட நாள் கழித்து அவர் தங்களுடன் உணவருந்தியதில் அருணும் ராதாவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.ஆனாலும் அந்த மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது.
சாப்பிட்டு முடித்ததும் ராமானுஜம் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். அதைப் பார்த்ததும் ராதாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஓடிச்சென்று தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அருணோ தன் செயலால் ஏற்பட்ட கோபத்தால் போய் கதவை மூடி படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் துாக்கத்தில் இருந்து விழித்த அருண் தன் அம்மாவை சமாதானப்படுத்தாமல் போய் படுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று தன்னை தானே திட்டிக்கொண்டான். தன் அம்மாவை சமாதானப்படுத்த அறையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு தான் ஏதோ புதிய இடத்தில் இருப்பது போல தோன்றியது. அவனுடைய வீட்டிற்கு வெளியே பல புதிய பறவைகளின் சத்தம். வீட்டை விட்டு வெளியே வந்தவன் அதிர்ந்து போய் பேச்சு மூச்சு இல்லாமல் நின்றான். 

அவனுடைய வீடு ஒரு மலை உச்சியின் மேல் இருந்தது. அவனுடைய கண்ணுக்கெட்டிய துாரம் வரை காடு காணப்பட்டது.தான் காண்பது கனவா என்று அருண் தன்னையே கேட்டுக் கொண்டான். தன் கையை கிள்ளிப்பார்த்தான், சுவரோடு தன் தலையை முட்டிப்பார்த்தான். அது உண்மைதான் என்று அருணுக்கு புரிந்தது. அவனுடைய தலைக்கு மேல் வித்தியாமான பறவைகள் பறந்தன. காட்டின் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமான ஒலிகள் எழுந்தன. அருணுக்கு ஜேம்ஸ் கமரூனின் அவதார் உலகிற்கு வந்தது போல் இருந்தது. அப்போதுதான் அருணுக்கு மலையின் விளிம்பிற்கு பக்கதி்ல் நின்று கொண்டிருந்தாள். அருண் அவளை நோக்கி ஓடினான். ராதா ஆட்டம் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் பயம் அப்பியிருந்தது தெளிவாக தெரிந்தது.

அருண்: அம்மா இங்க என்ன நடக்குதுஎன்று ஏதாவது தெரியுமா?

ராதா: இ்ல்லடா? நான்....காலைல வெளில.....வந்து பார்த்த போது....மொத்த.... இடமுமே மாறியிருந்தது.

ராதாவிடம் இருந்து வார்த்தைகள் தட்டு தடு மாறி வார்த்தைகள் வெளி வந்தன. இருவமே சிறிது நேரம் எதுவும் பெசாமல் நின்று கொண்டிருந்தனர். பின்பு ஏதோ யோசனை வந்தவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு ‘‘அப்பா” என்று கத்தி விட்டு ராமானுஜத்தின் அறையை நோக்கி ஓடினர்.
Like Reply


Messages In This Thread
RE: மூன்றாம் உலகம் - by Rukuktp - 01-08-2019, 06:13 PM



Users browsing this thread: 1 Guest(s)