01-08-2019, 05:25 PM
[color=var(--title-color)]விஜய் சேதுபதி படத்தைத் தயாரிக்கும் ராணா![/color]
[color=var(--title-color)]ம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படத்தை, தெலுங்கு நடிகரான ராணா தயாரிக்க இருக்கிறார்.[/color]
[color=var(--meta-color)]ராணா டகுபதி[/color]
[color=var(--content-color)]தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்', விஜய் சந்தர் எடுத்துக்கொண்டிருக்கும் 'சங்கத்தமிழன்' மற்றும் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் இசைக் கலைஞர் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் 'சங்கத்தமிழன்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடிக்க இருக்கிறார், விஜய் சேதுபதி.
[/color]
[color=var(--content-color)]விஜய் சேதுபதி
[/color]
[color=var(--content-color)]இப்படத்தில் கமிட்டான பிறகு, `முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 800 விக்கெட்களை எடுத்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமை முத்தையா முரளிதரனுக்கு உண்டு. அதனால், இப்படத்திற்கு '800' என்று தலைப்பிடத் திட்டமிட்டுள்ளனர்.
வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எனப் பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமன்றி, இப்படத்தை முதல் முறையாக தமிழில் 'தார் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், படத்தின் இணை தயாரிப்பாளராக தெலுங்கு நடிகர் ராணா கைகோத்துள்ளார். இதைத் தவிர நானி நடிப்பில் வெளிவந்த 'ஜெர்ஸி' படத்தின் தமிழ் ரீமேக்கையும் ராணா தயாரிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது[/color]

first 5 lakhs viewed thread tamil