Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]``ப்ச்... கொஞ்சம் முன்னாடியே அந்த முடிவை நான் எடுத்திருக்கணும்..!’’ - நடிகை கௌசல்யா[/color]

[color=var(--title-color)]நடிகை கெளசல்யா பேட்டி...[/color]
[Image: vikatan%2F2019-07%2Fe0ca4af6-58d6-406f-b...2Ccompress][color=var(--meta-color)]நடிகை கௌசல்யா[/color]
[color=var(--content-color)]தமிழ் சினிமா ஹோம்லி ஹீரோயின்களின் வரிசையில் 90-களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தவர் கௌசல்யா. தற்போது பெங்களூரில் இருக்கும் அவரிடம் பேசினோம்.[/color]
[color=var(--content-color)][color=var(--accent-color)]நீங்க பேஸிக்கா ஒரு மாடல்.. அதுக்கப்புறம் எப்படி ஹீரோயின் ஆனீங்க..?[/color]
``எனக்கு சொந்த ஊர் பெங்களூரு. சின்ன வயசுல இருந்து எனக்கு மாடலிங் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ என் அம்மாவோட தோழி மூலமா, சொட்டு நீலம் விளம்பரம் ஒண்ணுல முதன்முறையா நடிச்சேன். அதைத்தொடர்ந்து நிறைய விளம்பரங்கள் வர ஆரம்பிச்சது. அப்போ மலையாள டைரக்டர் பாலச்சந்திர மேனன், அவரோட `ஏப்ரல் 19’ படத்துக்கு புதுமுகம் தேடிக்கிட்டிருந்தாரு. அந்த நேரத்துல அம்மாவோட தோழி மூலமா அவரைப் பார்த்து அந்த படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். அந்தப் படம் ஷூட் முடிஞ்சு, ரிலீஸுக்கு ரெடியாகிக்கிட்டிருந்தப்போ, அந்தப் படத்தோட விளம்பரங்களை ஏசியாநெட் சேனல்ல பார்த்துட்டு, தமிழ்ல `காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்துக்குக் கூப்பிட்டாங்க.’’
[color=var(--accent-color)]விஜய்கூடவும் பிரபுதேவாகூடவும் தொடர்ந்து படங்கள் பண்ணுனீங்க.. அந்த அனுபவங்கள் எப்படி இருந்தது..?[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F5150bf71-1c5a-43f3-b...2Ccompress]
நடிகை கௌசல்யா
[/color]
[color=var(--content-color)]``விஜய் சார் பார்க்கத்தான் படு சைலண்ட்; நல்லா காமெடி பண்ணுவாரு. ஆனா அதை எல்லோர்கிட்டயும் பண்ணமாட்டாரு. அவரோட மனசுக்கு நெருக்கமானவங்கதான் அதை பார்க்கமுடியும். `ப்ரியமுடன்’ படம் பண்ணும்போது, `பூஜா வா’ பாட்டுக்காக ராஜஸ்தான் போயிருந்தோம். அந்த டைம்லலாம் விஜய் அடிச்ச காமெடி பஞ்சுகள் ஒவ்வொண்ணும் இன்னும் மனசுல இருக்கு. அந்த அளவுக்கு அவரோட பேச்சு காமெடியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அதேமாதிரி அவரோட டான்ஸ் பத்தி சொல்லவே வேணாம். `பூஜா வா’ பாட்டுல மூவ்மென்ட்ஸ் எல்லாமே ரொம்ப ஆக்ரோஷமா ஆடுற மாதிரி இருக்கும். விஜய் அந்த மூவ்மென்ட்ஸை எல்லாம் அசால்ட்டா ஆடிடுவாரு. நானோ டான்ஸ்ல ரொம்ப வீக். ரொம்ப கஷ்டப்பட்டேன். விஜய் அதைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு டிப்ஸ் தருவாரு. எத்தனை தடவை ஒன்மோர் போனாலும் பொறுத்துப்பாரு. பிரபுதேவா அப்படியே வேற மாதிரி, `வானத்தைப்போல’ படத்துல வர்ற `நதியே..’ பாட்டு மூவ்மென்ட்ஸ் ஒவ்வொண்ணும் ரொம்பக் கஷ்டம். ஆனா, அதை நான் கத்துக்கிறவரைக்கும் அவர் விடவே இல்லை. ரொம்ப ஈஸியா சொல்லிக்கொடுத்து ஆட வெச்சு எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தாரு.’’[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-08-2019, 05:12 PM



Users browsing this thread: 3 Guest(s)