Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
மீராவை ‘பொளேர்’ என கன்னத்தில் அடித்த சேரன் மனைவி? தொடர்ந்து கணவர் பற்றி அவதூறு பரப்பியதால் ஆத்திரம்!

சென்னை: தொடர்ந்து தனது கணவர் மீது அவதூறு பரப்பி வரும் மீரா மிதுனை நேரில் சந்தித்து, சேரனின் மனைவி அடித்ததாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே சேரனுக்கும், மீராவுக்கும் ஆகவில்லை. இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்ததால், மக்கள் மத்தியில் மீரா மீதான வெறுப்பு அதிகரித்தது. கடந்த வாரம் கிராமத்து டாஸ்க்கில் அவர் சேரன் மீது பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் குறும்படம் போட்டுக் காண்பித்தும் மீரா சமாதானம் ஆகவில்லை.

தொடர்ந்து சேரன் மீதே அவர் கூறிக் கொண்டிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சந்தித்த மீரா, கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


[Image: meeramithun-321-1564636268.jpg]


மீராவின் பேச்சு:
ஆனாலும் சேரன் மீதான விரோதப் போக்கை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளிலும் சேரன் மீது அவர் தொடர்ந்து புகார் கூறியே வருகிறார். பிக் பாஸ் வீட்டில் சேரன் ஒரு இயக்குநராகவே நடந்து கொள்வதாகவும், தன்னை கருப்பு கருப்பு என மட்டம் தட்டியதாகவும், தாழ்வுமனப்பான்மை உடையவர் எனக் கூறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
[Image: meera223-1564636852.jpg]
 
[color][font]
சேரன் மனைவி கோபம்:
இந்நிலையில், சேரன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால், மீரா மீது ஆத்திரமடைந்த சேரனின் மனைவி செல்வராணி, அவரை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மீராவை அவர் அடித்ததாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் செய்தி வைரலாகி இருக்கிறது.
[Image: director-cheran111-1564636879.jpg][/font][/color]
 
[color][font]

வைரலாகும் தகவல்:
இது தொடர்பாக செல்வராணியோ அல்லது மீராவோ அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தால் தான், இந்த சம்பவம் பற்றிய உண்மைத்தன்மை தெரிய வரும். ஆனால் இந்தச் செய்தி சேரன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறது என்பது மட்டும் அவர்களது கமெண்ட் மூலம் உறுதியாகி இருக்கிறது. தனது படங்களில் கூட பெண்களைக் கண்ணியமாகக் காட்டும் சேரன் மீது, தகாத புகார் கூறியதால் அவர்களது ரசிகர்கள் மீரா மீது இன்னமும் கோபத்தில்தான் உள்ளனர்.

[Image: cheran-2-1564636291.jpg][/font][/color]
 
[color][font]
போட்டியாளர்களின் பாராட்டு:
மீரா தவிர பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற அனைத்து போட்டியாளர்களுமே சேரன் பழகும் விதம் குறித்து நல்ல விதமாகவே கூறி வருகின்றனர். சமயத்தில் அவர் இயக்குநராக அதிகாரம் செய்வதாகக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பிரச்சினைகளில் அவரே நடுநிலையாளராக நின்று இருதரப்பிற்கும் பாதகம் இல்லாமல் தீர்வு சொல்வதாக அவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-08-2019, 05:10 PM



Users browsing this thread: 3 Guest(s)