Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை" - ஒரே வரியில் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள்

மிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2010ஆம் ஆண்டு கோவையில்,  சிறுமி முஸ்கான், அவளது தம்பி ரித்திக் இருவரும் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றவாளிகளில் ஒருவரான மோகன கிருஷ்ணன், காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக ஒரே வாக்கியத்தில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். மேலும், குற்றவாளி மனோகரன் தரப்பு தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
[Image: 201908011414490677_one-line-designation-...SECVPF.gif]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 01-08-2019, 05:02 PM



Users browsing this thread: 64 Guest(s)