01-08-2019, 04:59 PM
உன்னாவ் வழக்கு... அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்... முக்கிய உத்தரவுகள் இவைதான்!
டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ மற்றும் விசாரணை நீதிமன்றத்துக்கு அதிரடி உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்ணை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங் பலாத்காரம் செய்தார் என்பது வழக்கு. இது தொடர்பான விசாரணையில் சிபிஐ மொத்தம் 4 வழக்குகளை பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் புகார் தெரிவித்த இளம்பெண்ணை கொல்லவும் முயற்சி நடந்தது. இதனால் நாடு முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அவை:

![[Image: supreme-court22-1564650591.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/supreme-court22-1564650591.jpg)
இந்நிலையில் புகார் தெரிவித்த இளம்பெண்ணை கொல்லவும் முயற்சி நடந்தது. இதனால் நாடு முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அவை:
- உன்னாவ் சம்பவத்தில் சிபிஐ பதிவு செய்த 5 வழக்குகளும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றம் செய்யப்படுகிறது
- சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 4 வழக்குகளையும் விசாரணை நீதிமன்றம் 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.
- விசாரணை நீதிமன்றமானது வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்த வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல முயன்ற வழக்கின் விசாரணையை அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் சிபிஐ விசாரித்து முடிக்க வேண்டும்.
- கொலை முயற்சி வழக்கை விசாரிக்க 30 நாட்கள் அவகாசம் கேட்ட சிபிஐ கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரண தொகையை உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும்.
- பலாத்காரம் செய்யப்ப்ட்ட பெண், அவரது தாயார் மற்றும் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
- இந்த பாதுகாப்பு தொடர்பாக அப்பகுதி சிஆர்பிஎப் அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
- ரேபரேலி சிறையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை டெல்லி திஹார் சிறைக்கு மாற்றுவதாக உபி அரசு தெரிவித்ததை நீதிமன்றம் ஏற்கிறது.
first 5 lakhs viewed thread tamil