Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை கூட்டு பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகன்!

டெல்லி: பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோர் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கின் மகனால் கூட்டு பலாத்காரம் செய்யப்ப்ட்டதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உன்னாவ் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:


[Image: mla-kuldeep-singh-22-1564649429.jpg]


2017-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி எம்.எல்.ஏ. குல்தீப்சிங் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தில் மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,
பாதிக்கப்பட்ட பெண், பாஜக எம்.எல்.ஏவால் பலாத்காரம் செய்யப்பட்டது, பொய்யாக ஆயுத சட்டங்களின் கீழ் பெண்ணின் தந்தை மீது வழக்கு தொடரப்பட்டது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விசாரணை கைதியாக இருந்த போது மர்மமாக மரணம் அடைந்தது, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோர் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கின் மகனால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது ஆகிய 4 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளன.

இந்த 4 வழக்குகளிலுமே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இதை ஏற்று கடந்த 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை விவரங்களை நீதிமன்றம் பதிவு செய்யவில்லை.

இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 01-08-2019, 04:57 PM



Users browsing this thread: 63 Guest(s)