சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
திரும்ப திரும்ப சுத்தி சுத்தி நீ அந்த இடத்துக்கேதான் டி வர… phone போட்டு அவன் கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்ல்ல்லுடி” – (கோவத்தில் கடைசி வார்த்தையை சற்று அழுத்தி கூறினான்.. கல்கி படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போலவே..!!..) குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் கைகளில் soap நுரை இருப்பதால் முழங்கையால் நெத்தியில் இருக்கும் வியர்வையை துடைத்து பெருமூச்சு விட்டு ஒரு நிமிடம் என்னதான் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக தரையைப் பார்த்து நின்றாள் சங்கீதா.. bathroom கதவின் ஓரம் நிற்கும் குமாரைப் பார்த்து சில நொடி மௌனத்துக்கு பிறகு பேசினாள்.. – “ஒன்னு தெளிவா புரியுதுங்க…., உங்களுக்கு நான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க முடியும் னு நினைச்சது தப்பு. நீங்களே phone போட்டு ராகவ் கிட்ட தைரியமா என் பொண்டாட்டி உன் function க்கு compere பண்ண மாட்டா னு சொல்லிடுங்க. நான் போகல. – என்று சொல்லி தனது கைகளை துடைத்துக் கொண்டு phone எடுத்து ராகவ் number call செய்து speaker ல் போட்டாள். ரிங் சத்தம் கேட்டதும் பதறி அடித்து “ஏய்ய்ய்… ஏய்.. ஏய்.. ஏய்.. என்ன என்ன…..ஆ… என்ன இது… கட் கட் கட் பண்ணு முதல்ல…. கட் பண்ணு முதல்ல….” – நடுக்கத்தில் குமாருக்கு புருவங்கள் உயர்ந்தன, கண்கள் லேசான பயத்தில் விரிந்தன, வியர்வை நெத்தியில் வழிந்தது. phone ல் “ஹலோ” என்று ஒரு வார்த்தை கேட்டதும் லபக்கென குமாரே கட் செய்து விட்டான்… – ஒரு நிமிடம் பயத்தில் அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது அவனுக்கு. அருகில் உள்ள தண்ணீர் bottle எடுத்து முழுவதும் குடித்தான், காரணம் எங்கே தனது வேலைக்கு உலை வந்துவிடுமோ என்று எண்ணி. (இந்த பயத்துக்கு அவசியம் இல்லை, சங்கீதா சொல்வது போல பேசினால் கூட ஏதேனும் மாற்றம் நடந்திருக்கலாம் ஆனால் குமாரின் எண்ணங்கள் அப்படி.) என்னைப் பத்தி அந்த Raghav கிட்ட ஏதாவது….? – தன்னைப் பற்றி ஏதாவது ராகவ் கிட்ட சொல்லி இருக்கியா என்று வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்களால் கேள்வியை எழுப்பினான் குமார் “பயப்படாதீங்க, நீங்க இன்னைக்கி வரைக்கும் IOFI ல வேலை செயுரீங்கன்னு நான் ராகவ் கிட்ட சொல்லிகவே இல்லை.” – சலித்துக்கொண்டே எரிச்சலில் மீண்டும் குழந்தைகளுக்கு உடம்பில் தண்ணி ஊத்த ஆரம்பித்தாள் சங்கீதா. அப்போது மெதுவாக “அப்படியே சொன்னாலும் தலைல தூக்கி வெச்சிக்குற மாதிரியா ஏதாவது செஞ்சி இருக்க போறீங்க?” என்று முணுமுணுக்க… குமாரின் காதில் பாதியாகத் தான் கேட்டது, உடனே. “என்ன சொன்ன? சொல்லு எனக்கு கேட்கல என்ன சொன்ன சொல்லு….” – கோவமும் முழுதாக காமிக்க முடியாமல், எரிச்சலும் காட்ட முடியாமல் குழப்பத்தில் டென்ஷன் ஆகி வியர்த்து நின்றான் குமார். “இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்? உங்க வயசுல பாதிதான் அவருக்கு, பயப்படாம பேச வேண்டியதுதானே? – மீண்டும் phone ஐ அவனது கையில் குடுத்தாள் சங்கீதா. என்னடி? நக்கலா?, – ( ஒரு நிமிடம் “வயசு கம்மின்னாலும் அவன் CEO, நான் வெறும் designer தான் அவன் கிட்ட உன் அளவுக்கு என்னால பேச முடியாது” என்று வெளிப்படையாக குமாரால் சங்கீதாவை ப் பார்த்து பேச முடியவில்லை. அந்த இயலாமையின் பிரதிபலிப்பு அவனது சுட்டெரிக்கும் பார்வையில் தெரிந்தது.) “என்னதான் உங்க பிரச்சினை குமார்? எதுக்கு நான் compere பண்ணக் கூடாதுன்னு சொல்லுறீங்க? come on lets be frank & have our heart transparent, எனக்கு பிடிச்சி இருக்கு அதனால நான் செய்யுறேன். what’s the problem?” – குழந்தைகளை குளிப்பாட்டி முடித்து விட்டு டவலால் ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் துவட்டி விட்டு ஸ்நேஹாவுக்கு ஷிமியும் ஜட்டியும் மாட்டிவிட்டு, கை அருகே buff வைத்த red frock ஒன்றை அணிவித்தாள். ரஞ்சித்துக்கு சமீபத்தில் அவனது பிறந்த நாளுக்கு வாங்கிய சிறிய அளவிலான suit & bow tie மாட்டிவிட்டு, தன் உதட்டுக்கு lip gloss தடவிக்கொண்டே கேட்டாள். அவள் கேட்ட கேள்விக்கு பதிலை நேரடியாக ஆத்திரம் தாங்க முடியாமல் இப்போது சொல்ல ஆரம்பித்தான். “நீ மேடை ஏறினதும் அவனவன் உன் முகத்தையும் உன் உடம்பையும் பார்க்குறப்போ அவனுங்க கண்ணாலேயே உன்னை கற்பழிப்பானுங்க டி, இவ்வளவு open அ பேசினது போதுமா, இல்லை இன்னும் சொல்லனுமா?” – நன்றாகவே அடித்தொண்டையில் இருந்து கத்தினான் குமார். ஒரு நிமிடம் அவன் பேசிய பிறகு குழந்தைகளை ப் பார்த்தாள் சங்கீதா, இருவரது கண்களும் சற்று மிரண்டு இருந்தது. குமார் பக்கம் சட்டென திரும்பி ஒரு முறைக்கும் பார்வை ப் பார்த்து பேசினாள். “How such cheap words came in your mouth kumar?” – குமாரை நெருங்கி வந்து அவனது கண்களை ப் பார்த்து க் கேட்டாள். “frank அ, transparent அ பேசலாம்னு சொன்ன்ன்ன இல்ல அதான் நல்லா opppppen அ பேசிட்..” – குமார் அழுத்தி அழுத்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருன்தவள் குறுக்கிட்டு ஒரு நொடி கண்களை அழுத்தி மூடி, பேசினது போதும் என்பது போல தன் இடது கையை சடாரென உயர்த்தி பாவனை செய்து காமித்தாள்.)


இதுக்கும் மேல ஏதாவது என் குழந்தைங்க முன்னாடி நீங்க அசிங்கமா பேசினா…. ( பெருமூச்சு விட்டு சில வினாடிகளுக்கு பிறகு சொன்னாள்..) “நடக்குறதே வேற..” கண்களை இன்னும் அவள் திறக்கவில்லை, அவளது முகம் சிவந்து இருந்தது. குமாருக்கே ஒரு நொடி அவளின் மௌனமான கோவத்தை ப் பார்த்து இதற்கும் மேல் ஏதாவது பேசினால் பிரச்சினை ஆகும் என்று எண்ணி மெல்ல இரண்டடி பின் நகர்ந்து நின்றான்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 31-07-2019, 09:47 AM



Users browsing this thread: 3 Guest(s)