நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 66

 எங்கடா போறோம் என கேட்டான் விக்கி .பாருக்கு பாஸ் என்றான் .என்னது பாருக்கா என்று சிறிது நேரம் யோசித்தான் .

ஏன் என்றால் சுவாதி இருக்கும் வரை குடிக்கவே கூடாது என்று முடிவு செய்து இருந்தான் ,அதனால் கடந்த 3 மாதங்களாக அவன் சுத்தமாக சாராயம் ஒரு துளி கூட எடுக்க வில்லை .எப்போதாவது டேவிட் குடிக்க சொன்னாலும் எதாச்சும் சொல்லி சமாளிச்சு குடிக்காம விட்டுடுவான் .
சிகெரட் மட்டும் வேற வழி இல்லாம அடிப்பான் .இருந்தாலும் இன்னைக்கு குடிக்கனும்னு அவனே நினைச்சான் காரணம் வள்ளிக்கும் மணிக்கும் இருக்க ஒரு வாழ்க்கை நமக்கு இல்லன்னு ஒரு ஏக்கம் .பாஸ் என்ன யோசிக்கிறிங்க என்ன சரக்கு அடிப்பமோ வேணாமானு எனக்கு கூட ஓகே இன்னைக்கு சரக்கு அடிகாட்டி பரவல ஆனா உங்களுக்கு கண்டிப்பா இன்னைக்கு அடிக்கணும் போல இருக்குமே என்றான் .
எப்படிடா உனக்கு தெரியும் என கேட்டான் .என்ன பாஸ் இன்னைக்கு நீங்க போன இடம் அப்படி என்றான் ..அப்படி எங்கடா போனேன் என்றான் .என்ன பாஸ் வள்ளி மணி குழந்தை அழகா இருந்துச்சா என்றான் .ம்ம் இருந்துச்சு என்றான் விக்கி .அத பாத்த உடனே உங்களுக்கு ஒரு மாதிரி இருந்து இருக்குமே என்றான் .விக்கி ஒன்னும் சொல்லமால் இருந்தான் .சொல்லுங்க பாஸ் என்றான் .ஆமா இருந்துச்சு என்றான் விக்கி .நம்மளும் கல்யாணம் முடிச்சு இதே மாதிரி குழந்தை பேரனும் போல இருந்து இருக்குமே என்றான் .
அட ஆமாடா சரி விடு எனக்கு அத நினைச்சாலே மண்ட வலிக்குது வா முதல சரக்கு அடிப்போம் என்றான் விக்கி .பின் இருவரும் பாருக்கு போயி சரக்கு அடித்தனர் .விக்கி நிறைய குடித்தான் பின் சொன்னான் டேய் வருண் எல்லாம் இருந்தும் இல்லாத மாதிரி உனக்கு தொனி இருக்கா என கேட்டான் விக்கி .என்ன பாஸ் சொல்றிங்க ஒன்னும் புரியல என்றான் வருண் .உனக்கு புரியாது ஏன்னா இன்னும் நீ அந்த நிலைமைக்கு வரல என்றான் .
பாஸ் உங்க பீலிங் புரியுது எனக்கும் கூட இதே மாதிரி என் பிரண்ட்ஸ் குழந்தை பெத்துகிட்டப்ப இப்படி தோணிருக்கு என்றான் .ஒ அது இல்லடா இது வேற என்றான் .என்ன பாஸ் அது சொல்லுங்க என்றான் வருண் .அது அது அது என்னமோடா தெரியல என்று போதையில் உளறினான் விக்கி ,சரி விடுங்க பாஸ் உங்க கதைய நீங்க சொல்ல வேணாம் என் கதைய நான் சொல்றேன் .என் ஆளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்றான் வருண் .
எப்படா சொல்லவே இல்ல என்றான் விக்கி .நீங்க எங்க இந்த 3 மாசமா ஒழுங்காவே பேச மாட்டிங்கிரிங்க அப்புறம் எப்படி சொல்ல என்றான் .ஓகே சாரிடா சொல்லு என்றான் விக்கி .என்னத்த சொல்ல அவ வீட்ல கல்யாணம் பிக்ஸ் பண்ணி அவளுக்கு கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க அப்புறம் என்ன பண்ண என்றான் .அவ என்னடா சொன்னா என கேட்டான் விக்கி .அவ என்னத்த சொல்லுவா எங்க அப்பா தான் முக்கியம் என்னைய மறந்துடுன்னு சொல்லிட்டு போயிட்டா என்றான் .
அது என்னடா உலகம் முழுக்க இப்படி ஒரு டைப் பொண்ணுக இருக்காளுக போல என கேட்டான் .அவள சொல்லி தப்பு இல்ல நான் தான் அவளுக்கு உண்மையா நடந்துக்கிரள எப்பயுமே அவ அங்கிட்டு போனா இந்த பக்கம் பார்டி பப்ன்னு போயி ஏவ கூடயாச்சும் படுத்ததுக்கு தான் எனக்கு அந்த கடவுள் இப்படி ஒரு தண்டனையே கொடுத்துட்டார் போல என்று சொல்லி அழுதான் .விளங்கும் இவன் நமக்கு சமாதானம் சொல்வான்னு பாத்தா இப்ப இவன் அழுது இவனுக்கு நாம சமாதனம் சொல்லணும் போல என்று நினைத்து கொண்டு சரி அழுகதா இன்னும் கொஞ்சம் சரக்கு அடி என்றான் .
அப்புறம் இந்த பொண்ணுகள ஏண்டா உலகத்துல கடவுள் படைச்சாரு என்றான் .தெரியலையே பாஸ் என்றான் .எனக்கும் தெரியல ஆனா நம்மள கஸ்டபடுத்த மட்டும் படைச்சு இருக்காருன்னு தெரியும் என்றான் விக்கி .அது உண்மை பாஸ் என்றான் வருண் .அப்புறம் பாஸ் உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் முடிச்சுட்டாங்க நீங்க எப்ப கல்யாணம் முடிச்சு மணி அண்ணே மாதிரி குழந்தை பெத்துக்க போறீங்க என கேட்டான் வருண் .
நான் கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டேன் ஆனா எனக்கு மூனு மாசத்துல குழந்தை பிறக்க போகுது என்றான் .போங்க பாஸ் சரக்கு அடிச்சதால என்ன என்னமோ போதைலே உலருரிங்க என்றான் வருண் .அது என்னமோ நான் சொல்றத சொல்லிட்டேன் நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ என்றான் விக்க .சரி பாஸ் அத விடுங்க நீங்க கல்யாணம் சீக்கிரம் பண்ணுங்க என்றான் வருண் .எதுக்குடா என்றான் விக்கி .
ஏன்னா உங்களுக்கு வயசு ஆகிடுச்சு என்றான் வருண் .ஏன் நீ கல்யாணம் பண்ண வேண்டியது தானே உன் வயசு என்ன என்றான் .எனக்கு 26 தான் காலேஜ் முடிச்சதும் கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டேன் உங்க வயசு என்ன என்றான் வருண் .ம்ம் 31 இல்ல இந்த ஜனவரி இல்ல டிசம்பர் இல்ல என் பிறந்த நாள் மறந்து போச்சு என்று உளறினான் ,சரி எது எப்படியோ உங்களுக்கு வயசு ஆகிடுச்சு சீக்கிரம் கல்யாணம் முடிங்க என்றான் .
எனக்கு ஒரு மயிரும் வேணாம் பட்டது எல்லாம் போதும் நீ இன்னும் ரெண்டு பேக் ஆர்டர் பண்ணு என்றான் விக்கி .பாஸ் ஏற்கனவே நிறைய குடிச்சுட்டிங்க போதும் என்றான் ,அதுவும் ரைட் தான் இந்த மாதிரி ஒரு தடவ அதிகமா சரக்கு அடிச்சதால தான் என் வாழ்க்கையே திசை மாறுச்சு சோ வா போகலாம் என்று தள்ளாடி கொண்டே வெளியேறினான் .விக்கி போதையில் கார் கதவை கூட திறக்க முடியாமல் சாவியை வைத்து போதையில் நொண்டி கொண்டே இருந்தான் .
அத கொடுங்க பாஸ் நானே உங்கள வீட்ல கொண்டு போயி விடுறேன் என்றான் வருண் .நோ நோ தம்பி நானே போயிக்கிறேன் என்றான் .அட நீங்க இருக்க நிலைமைல வேற எங்காச்சும் தான் போவிங்க என் கிட்ட கொடுங்க நான் கொண்டு போயி விடுறேன் என்றான் வருண் .அப்படியாச்சும் போயி சேருறேன்டா என்னைய யாருக்கும் பிடிக்கல நான் ஒரு கெட்டவன் என்று அவன் ஒளரி கொண்டு இருக்க வருண் அவனிடிம் சாவியை வாங்கி காரை திறந்து அவனையும் உள்ளே தள்ளி காரை ஒட்டி கொண்டு போனான் .
அவன் வீட்டிற்கு போயி நிறுத்தினான் .சாவியை விக்கியிடம் இருந்து கதவை திறந்தான் .உள்ளே சுவாதி உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்ததும் சாரிங்க நான் வீடு மாறி வந்துட்டேன் என்றான் வருண் .சுவாதி விக்கியை பார்த்ததும் இல்ல கரெக்ட் தான் அவன உள்ள கொண்டு வா என்று சொல்லி கொண்டு எழுந்தாள் .அப்போது தான் அவள் வயிற்ரை பார்த்தான் வருண் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 31-07-2019, 09:43 AM



Users browsing this thread: 51 Guest(s)