31-07-2019, 09:26 AM
பருவத்திரு மலரே- 35
” நீ… இப்படித்தான் செய்வேன்னு… நெனச்சேன்டி..” வீட்டுக்குள் நுழைந்ததும் ஆதங்கத்தோடு சொன்னான் ராசு.
எதுவும் பேச முடியவில்லை அவளால்..!
அழுகை வரும் போலிருந்தது. அவன் முகத்தைக் கூடப் பார்க்கத் திராணியில்லாமல்… போய்..சொம்பில் தண்ணீர் மோந்து..வந்து.. தலையைக் குணிந்து கொண்டே.. அவனிடம் கொடுத்தாள்.
” பழக்கமெல்லாம் புதுசாருக்கு..” என்றுவிட்டு… வாங்கி.. அன்னாந்து குடித்தான்.
அவன் முழுதாகககூட தண்ணீர் குடிக்கவில்லை. அதற்குள்ளாகவே.. அவன் நெஞ்சில் முகம் சாய்த்து… அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் பாக்யா.
அவன் தடுமாறியதில்… அவன் வாயிலிருந்து சிந்திய தண்ணீர்… அவள் தலையை நனைத்தது.
”ஏய்…தண்ணி குடிக்கவிடுடீ..” என்றான்.
அவள் பேசவில்லை.
அப்படியே தண்ணீர் குடித்துவிட்டு… சொம்பால் அவள் மண்டையில் ‘நங் ‘ கெனக் கொட்டினான்.
”ஏன்டி.. இப்படி பண்ண…?” எனக் கேட்டான்.
அவள் எதுவும் பேசவில்லை.
பெருமூச்சு விட்டு. . ” ஆனா ஒரு விசயத்துல.. உன்ன பாராட்டனும்..” என்றான்.
‘என்ன. .?’ எனக் கேட்க நினைத்தாள். ஆனால் வாயைத் திறக்கவில்லை. தலையையும் தூக்கவில்லை.
அவனே சொன்னான் ” நீ எந்த ஊருக்கு போனாலும்.. உன் பேரும்… புகழும் ஊர்பூரா…கொடிகட்டி பறக்குது..!”
அவள் சிரித்துவிட்டாள்.
அவளைத் தள்ளி நிறுத்தினான்.
செல்லமாகவும் அல்லாமல்… பலமாகவும் அல்லாமல்… அவள் கன்னத்தில் ஒரு அறைவிட்டான்.
உடனே அவள் கண்கள் கலங்கியது.
”ஆத்திரம் தீந்துருச்சா..?” எனக் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு. . கேட்டாள்.
” வெட்டிப்போட்டாலும் தீராது..! ஆனா என்ன பண்றது… அதனால எதுவும் மாறிடப்போறதில்ல..!” எனப் பெருமூச்சு விட்டு.. ”கல்யாணத்த ஏன் ஒரு வாரம் தள்ளி வெச்சுட்டாங்க..?” எனக்கேட்டான்.
” ஊருக்குள்ள.. நோம்பி சாட்டிருக்காங்க.. நாளைக்கு காலைல குண்டம்..” என்றுவிட்டுப் போய் பாயை எடுத்து.. கீழே விரித்தாள். ”உக்காரு. .”
பாயில் உட்கார்ந்து.. சுவற்றில் சாய்ந்தான். அவளும்.. அவனை ஒட்டி உட்கார… வெளியிலிருந்து.. ஓடி வந்தான் அவளது தம்பி..!
ராசுவைப் பார்த்து..
”ஐ… எப்ப மாமா.. வந்த..?” எனக் கேட்டான்.
” இப்பதான்டா.. நீ எங்க போன?”
” பரத்தண்ணங்கூட..அங்கருந்தேன் மாமா..!” எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
”அவன் இனிமே… அண்ணனில்லடா உனக்கு.. மச்சான். .” என்றான் ராசு.
” ஆமா மாமா..!”
பாக்யா சிரித்தாள். ஆனால் பேசவில்லை.
”கோயில்ல தூரியெல்லாம் போட்டுட்டாங்க.. மாமா..” என்றான்.
”எத்தனை தூரிடா..?” பாக்யா கேட்டாள்.
” பெருசு ஒண்ணு… சின்னது ஒண்ணு..”
கதிர் இருந்ததாலோ.. என்னவோ… ராசு.. அவளிடம் வேறெதுவும் கேட்கவில்லை.
அப்பறம்.. அவளது பெற்றோரும் வந்து விட… அவர்கள் பேச்சு மறுபடி… அவளது… கல்யாணம் பற்றியே நடந்தது.
அவள் எதுவுமே… பேசாமல்.. அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவ்வப்போது… அவளுக்கு திட்டு கிடைக்கத் தவறவில்லை.
மதியத்திற்கு மேல்… சாப்பிட்ட பின்… அவள் அப்பா ஒரு தூக்கம் போடுவார். சில நாளில் அம்மாவும் தூங்குவாள்.
இன்று ராசுவும்… பேசிக்கொண்டே படுத்தவன் தூங்கிவிட்டான்.
பாக்யாவுக்கு தூக்கமே வரவில்லை. அவள் பெற்றோர் இருப்பதால்.. அவனை எழுப்பவும் வழியில்லை.
அவளும்… அவனருகிலேயே.. அமைதியாகப் படுத்துக்கிடந்தாள்.

first 5 lakhs viewed thread tamil