screw driver ஸ்டோரீஸ்
ஏன்..?? ஏன் இந்த தவிப்பு..?? எதற்காக இந்த துயரம்..?? அப்படி என்ன உனக்கு ஒரு பிடிவாதம்..?? பிறந்தது முதலாய் இருண்டு போயிருந்த உன் வாழ்க்கையை.. பிரகாசமாக மாற்றக்கூடிய பகலவன் ஒருவன்.. படிக்கட்டில் இறங்கி வருகிறான் பார்..!! உன்னை விட்டு விலகேன் என்று.. உன் வீட்டு வாசலிலேயே வந்து நிற்க போகிறான் பார்..!! உனது பிடிவாதம் அகற்று.. ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொள்.. அணைத்துக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அழு.. கண்ணீருடனே உன் கதையை அவனுக்கு உரைத்திடு.. 'இதற்காகத்தான் ஓடி ஒளிந்தாயா பைத்தியம்?' என்றவன் புன்னகைக்கையில்.. அவனுடைய முகத்தில் ஆயிரம் முத்தங்கள் வைத்திடு..!! போ.. அவனுடன் இணைந்து விடு.. நீயும் வேதனையில் உழன்று, அவனையும் வெறுமனே அலைக்கழிக்காதே..!!'

மீராவுடைய ஒருமனது.. அந்தமாதிரி காதலனுடன் கலந்துவிடலாமா என ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டிருக்கிற வேளையிலே.. அவளுடைய இன்னொரு மனது படக்கென்று விழித்துக்கொண்டது.. கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி, அடிக்கடி அவளை திட்டி தீர்க்கிற அந்த மனது..!!

'அடச்சீய்.. வெட்கங்கெட்டவளே..!! புத்தி போகிறது பார்..!! அணைத்துக்கொள்ளப் போகிறாளாம்.. அழுதுபுலம்ப போகிறாளாம்.. அறிவில்லை உனக்கு..?? அவனுடைய அன்பு ஆழமானதுதான்.. ஆழமான அந்த அன்பினால்த்தான் உனக்காய் இப்படி அலைந்து திரிகிறான்.. ஆனால்.. அந்த அன்பிற்கு உரியவளாக உனக்கென்ன அருகதை இருக்கிறது..?? நீ கற்பிழந்த கதையைச் சொல்லியா அவனிடம் இருந்து காதலைப் பெற்றாய்..?? அவனிடம் நீ சொன்னதெல்லாம்.. வாய் நிறைய புழுகும்.. வண்டி வண்டியாய் பொய்களும்தானே..?? அவன் உன்னை கண்மூடித்தனமாய் காதலிக்கிறான் என்றதும்.. அவனது மாசற்ற அந்த காதலை.. உன் வசதிக்கேற்ப உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா..?? ச்சீச்சீய்..!! எந்த மாதிரியானதொரு சந்தர்ப்பவாதியடி நீ..?? வேதனை தாளவில்லையென வெட்கம் துறந்திட துணிந்தாயோ..?? மகிழ்வான வாழ்வுக்கென மனசாட்சி கொன்றிட நினைத்தாயோ..??' - அந்த மனது அவ்வாறு சாட்டை சுழற்ற..

'இல்லை.. நான் அப்படிப்பட்டவள் இல்லை..!!' - அடுத்த மனது அஞ்சி நடுங்கியது..!!

'சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதலில் இதற்கு பதில் சொல்.. உனது காதலை அவனுடைய கண்ணைப் பார்த்து சொல்லியே தீருவேன் என்று அடம்பிடித்தாயே.. அதேபோல் உனது கற்பை தொலைத்த கதையையும் அதே கண்களை பார்த்து உரைத்திடும் தைரியம் இருக்கிறதா உன்னிடம்..?? எப்படி சொல்வாய்.. எங்கிருந்து ஆரம்பிப்பாய்.. எதையெல்லாம் சொல்லிவிடுவதாக எண்ணம் உனக்கு..?? உனது கதையைக் கேட்டு.. அவனது கண்களில் அனிச்சையாய் ஒரு கலக்கம் ஏற்பட்டாலும்.. அதைத் தாங்கிக்கொள்கிற திறனிருக்கிறதா உன்னிடம்..??'

'இல்லை.. சத்தியமாக இல்லை..!!'

'அப்புறம் எப்படி சொல்லப் போகிறாயாம்..??'

'முடியாது.. என்னால் முடியவே முடியாது..!!'

எதிர்பாராத சூழ்நிலை.. எண்ணங்களில் ஏற்பட்ட பிறழ்வு..!! மீராவுடைய மனம்.. அதிர்ச்சி, குழப்பம், பிரமிப்பு, பெருமிதம், காதல், ஏக்கம், கழிவிரக்கம் என.. விதவிதமான முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொண்டு.. மீராவை நிலைகுலைந்து போக செய்தன..!! தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்.. குழப்பமான எண்ணங்களை அடக்கி.. ஒரு தெளிவான முடிவெடுக்க முயற்சி செய்தாள்..!!

'இல்லை.. அவன் என்னை பார்க்க கூடாது.. அவன் என்னை பார்க்கிறானோ இல்லையோ.. நான் இனி அவனை பார்க்கவே கூடாது.. என் மனதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. 'அணைத்துக்கொண்டு அழு போ' என்று என்னையே முடுக்கி விடுகிறது.. அவனை எதிரே பார்த்தால் என் வைராக்கியம் உடைபடப்போவது உறுதி..!! அது நடக்கக்கூடாது.. அவன் வரும்போது நான் இங்கிருக்க கூடாது.. அவன் வந்து எழுப்பப்போகிற அழைப்புமணி ஓசை என் காதில் விழவே கூடாது..!!'

"கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்..."

மீரா ஒரு தெளிவான முடிவுக்கு வந்து கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் அழைப்புமணியின் சப்தம் காதை கிழித்தது..!! அதைக்கேட்டதும் அவளிடம் மெலிதான ஒரு பதற்றம்.. ஒரு சிறு அதிர்ச்சி.. குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் வெடுக்கென எழுந்தாள்.. திரைச்சீலை விலக்கி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்..!! தூரத்தில் அசோக் தெரிந்தான்.. இப்போதுதான் படிக்கட்டை விட்டிறங்கி.. சாலையில் பிரவேசித்திருந்தான்.. இவளது வீடிருக்கும் திசையை நோக்கி நடை போட ஆரம்பித்திருந்தான்..!!

'வீதியிலே அவன் என்றானால்.. வீட்டு வாசலில் யார்..??'

ஓரிரு வினாடிகள் குழப்பமாக நெற்றி சுருக்கிய மீரா.. பிறகு அவசரமாக திரும்பினாள்.. விடுவிடுவென நடந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. ஹாலுக்குள் நுழைந்தவள் கதவினை நோக்கி நடந்தாள்.. படக்கென கதவை திறந்து பார்வையை வெளியே வீசினாள்..!!

வெளியே மனோகர் நின்றிருந்தான்..!! வெளுத்த முகம்.. அதில் ஒரு கருப்பு கண்ணாடி.. அடர்த்தியான கேசம்.. அதில் ஐந்தாறு நரைமுடி.. அகலமான நெற்றி.. அதில் இப்போது வியர்வை ஈரம்.. தடித்த உதடுகள்.. அதில் இப்போது அசட்டு சிரிப்பு..!! வெளியில் நின்றிருந்த மனோகரை பார்த்ததும்.. மீரா ஒரேநேரத்தில் ஒருவித எரிச்சலுக்கும், சலிப்புக்கும் உள்ளானாள்..!!

"என்ன..??" என்றாள் அந்த எரிச்சல் தொனிக்கும் குரலுடனே.

"என்ன என்ன..??" அவன் புரியாதவன் மாதிரி கேட்டான்.

"ப்ச்.. எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டேன்..!!"

"ஹ்ஹ.. என் வீட்டுக்கு நான் வர்றதுக்கு காரண காரியத்தோடத்தான் வரணுமா..?? வழியை விடு..!!"

எகத்தாளமாக சொன்னவன்.. தனது கனத்த உடம்புடன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய.. அவன் தன்மீது இடித்துவிடக்கூடாதென, மீரா அவசரமாய் விலகி நின்று கொண்டாள்..!!

[Image: RA+50.jpg]



"ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!! என்னா வெயிலு..?? ச்ச.. எல்லாம் அப்படியே அவிஞ்சுரும் போல இருக்கு..!!"

சலிப்புடன் சொன்ன மனோகர்.. குளிர்கண்ணாடியை கழற்றி பாக்கெட்டில் செருகிக்கொண்டான்..!! சட்டையின் மேலிரண்டு பட்டன்களை கழற்றி விட்டுக்கொண்டான்.. உரிமையுள்ளவனாக நடந்து சென்று உள்ளறைக்குள் நுழைந்தான்..!! கதவை அறைந்து சாத்திய மீரா.. ஹாலில் நின்றவாறே அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மனோகர் சென்று ஃப்ரிட்ஜை திறந்தான்.. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற உணவுப்பண்டங்களை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டான்..!!

"ஐ ஹேட் திஸ்..!!"

சொல்லிக்கொண்டே உள்ளேயிருந்து அந்த பழச்சாறு பாட்டிலை எடுத்தான்.. ஃப்ரிட்ஜ் மீதே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தம்ளர்களில் ஒன்றை எடுத்து.. அதில் அந்த வெண்ணிற பழச்சாறை நிரப்பிக்கொண்டான்..!! ஃப்ரிட்ஜை மூடிவிட்டு மீராவின் பக்கம் திரும்பினான்..!!

"ஐ ரியல்லி ஹேட் லைம் ஜூஸ்..!!"

என எரிச்சலாக சொல்லியபடியே.. க்ளாஸிலிருந்த எலுமிச்சைச்சாறை உறிஞ்சிக்கொண்டான்..!! கையில் ஜூஸ் தம்ளருடனே.. நடந்து ஹாலுக்கு வந்தான்..!! அவ்வளவு நேரமாக அவனையே முறைத்துக்கொண்டிருந்த மீரா.. இப்போது பார்வையை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டாள்..!! மனோகர் அவ்வப்போது பழச்சாறை உறிஞ்சிக்கொண்டே.. முகத்தை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்து.. பார்வையாலேயே அந்த வீட்டை அளவெடுத்தான்..!!

மனோகர்.. மதுசூதனனின் மருமகன்.. மதுசூதனனின் முதல் மனைவிக்கு பிறந்த மகளான புவனாவுடைய புருஷன்..!! பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக கிடந்த மதுசூதனன்.. பத்து மாதங்களுக்கு முன்பாக உயிரை விட்டதில் இருந்து.. அவருடைய கம்பனி முதலான சொத்துக்களை எல்லாம்.. கண்காணிக்கிற பொறுப்பு மனோகருக்கு வந்தது சேர்ந்தது.. இல்லாவிட்டால்.. இவனாகவே அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டான் என்றும் சொல்லலாம்..!! கண்காணிக்க ஆரம்பித்த சொத்துக்களை எல்லாம்.. இப்போது ஒவ்வொன்றாக கையகப்படுத்திக் கொண்டிருக்கிறான்..!!

"வீடு மாதிரியா இருக்குது இது.. ஏதோ பண்டாரப்பசங்க தங்குற மடம் மாதிரி இருக்குது..!!" வீட்டை சுற்றி பார்த்த மனோகர் சலிப்பாக சொன்னான்.

"......................" மீரா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

"ஹ்ம்ம்.. நெறைய வேலையாகும் போல இருக்கே..?? இன்டீரியர்லாம் கம்ப்ளீட்டா மாத்தனும்.. மொதல்ல இந்த கலரை மாத்தணும்.. வெள்ளவெளேர்னு அசிங்கமா..!!"

"......................"

கொஞ்சமாய் மிச்சமிருந்த பழச்சாறையும், மனோகர் இப்போது தொண்டைக்குள் சரித்துக்கொண்டான். உதட்டை நாவால் நக்கிக்கொண்டான். க்ளாஸை டீப்பாயில் வைத்தவன், மீராவை ஏறிட்டு திடீரென சொன்னான்.

"ஹேய்.. அந்த விழுப்புரம் பார்ட்டி சொன்னேன்ல.. அவங்க அடுத்த வாரம் வீட்டை பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்க..!!"

"ஓ..!!"

"வீடு புடிச்சிருந்தா.. உடனே ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்க..!!"

"ம்ம்..!!"

"ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதுன்னா.. நீ உடனே வீட்டை காலி பண்ற மாதிரி இருக்கும்..!!"

மனோகர் அந்த மாதிரி கூலாக சொல்ல, மீரா இப்போது முகத்தை சரக்கென திருப்பி அவனை முறைத்தாள். சற்றே வெப்பம் தகிக்கிற குரலில் சொன்னாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 30-07-2019, 06:31 PM



Users browsing this thread: 2 Guest(s)